குக்கரில் சில உணவுகளை சமைப்பது பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அது உணவின் சுவையையும் அமைப்பையும் அழிக்கக்கூடும். பிரஷர் குக்கரில் சமைக்கத் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மீன்:
பொதுவாக யாருமே மீன்களை குக்கரில் சமைக்கமாட்டார்கள். எனினும் சிலர் சமைக்கக்கூடும். ஆனால் மீன்களை சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது ஆரோக்கியமற்றது. மீன் மிகவும் மென்மையான அமைப்பைக் கொண்டுள்ளது, எனவே குழம்பு போன்ற பொருட்களை குக்கரில் சமைக்கும் போது அது அதிகமாகச் சமைக்கும் அபாயம் உள்ளது.
இதனால் மீன்கள் உலர்ந்து அதன் சுவையை இழக்க நேரிடும். கடுமையான வெப்பம் காரணமாக, குக்கரில் மீன் சமைப்பது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் குறைக்கிறது. இது மீனின் கொழுப்பு உள்ளடக்கத்தை குறைக்கிறது. ஆனால் அதே நேரம் மண் பானை அல்லது நீங்கள் வழக்கமாக குழம்பு வைக்கும் பாத்திரங்களில் மீன்களை சமைப்பதன் மூலம் அதன் சுவையும் ஊட்டச்சத்தும் மாறாமல் இருக்கும்.