குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். ஏனெனில் இந்த சீசனில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையும். இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே நாம் சாப்பிடும் காய்கறிகளை சரியாக தேர்ந்தெடுப்பது ரொம்ப பேர் முக்கியம். அதாவது சில காய்கறிகள் உடலுக்கு வெப்பத்தையும் அளிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இன்னும் சிலவையோ செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, குளிர்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன? என்பது பற்றி இங்கு காணலாம்.
26
கீரை
கீரை ஆரோக்கியமானது என்றாலும் குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவில் இதை சாப்பிடவே கூடாது. குளிர்காலத்தில் கீரை சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்திவிடும். ஒருவேளை நீங்கள் கீரை சாப்பிட விரும்பினால் அதை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிட வேண்டாம்.
36
இலை காய்கறிகள்
முட்டைகோஸ் போன்ற இலையுடன் இருக்கும் காய்கறிகளை மழை, குளிர் காலங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த பருவங்களில் இவற்றில் பூச்சி, புழுக்கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
காலிஃப்ளவர் எலும்புகளுக்கு வலி சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்தில் இதில் பச்சை நிற புழுக்கள் அதிகமாகவே இருக்கும். மேலும் அதுபோல இது மண்ணில் வளரும் காய்கறிகள் என்பதால் புழுக்கள் அதிக அளவு காணப்படும். எனவே, இதை முறையாக வெந்நீரில் சுத்தம் செய்து சாப்பிடவும். இல்லையெனில் குளிர்காலத்தை இதை தவிர்ப்பது நல்லது.
56
காளான் :
குளிர் மற்றும் மழை காலத்தில் காளான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த சமயத்தில் விஷத்தன்மை வாய்ந்த சில காளான்களும் அதிகமாக வளரும் என்பதால் முடிந்த வரை காளான் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
66
கத்தரிக்காய்
கத்தரிக்காயில் ஆல்கலாய்டுகள் இருக்கிறது. மழை, குளிர் காலங்களில் இது கத்தரிக்காயில் பூச்சி தாக்குதலை அதிகமாக்கும். எனவே கத்தரிக்காயை மழை, குளிர் காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் இந்த சீசனில் கத்திரிக்காயை அதிகமாக எடுத்துக் கொண்டால் சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.