நம்ம கிச்சன்ல தினமும் பயன்படுத்துற சில பொருட்கள், டாய்லெட் சீட்டை விட அதிக கிருமிகள் நிறைஞ்சதுன்னு உங்களுக்குத் தெரியுமா? இதனால்தான் பல உடல்நலப் பிரச்சனைகள் வருது.
நம்ம ஆரோக்கியம் சமையலறையில இருந்துதான் தொடங்குது. ஆனா, நாம ரொம்ப சுத்தமா இருக்குன்னு நினைக்கிற நம்ம கிச்சன்ல இருக்குற சில பொருட்கள்தான் நோய்களின் பிறப்பிடமா இருக்கு. டாய்லெட் சீட்டை விட அதிக கிருமிகள் இங்கேதான் இருக்கு. இதையும் கிளிக் செய்யவும் - சமோசா இந்திய உணவு இல்லையாம்! இதன் ஆச்சரிய வரலாறு இதோ.!
24
வீட்டில் டாய்லெட் சீட்டை விட அசுத்தமான பொருட்கள்:
டாய்லெட் சீட்டை விட நம்ம கிச்சன்ல இருக்குற இந்த பொருட்கள்தான் பாக்டீரியாக்களின் ஹாட்ஸ்பாட்.
கிச்சன் ஸ்பாஞ்ச்: பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சில் ஈரம் தங்குவதால், டாய்லெட் சீட்டை விட 2 லட்சம் மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இதில் உருவாகின்றன.
கட்டிங் போர்டு: காய்கறி, இறைச்சி வெட்டும் போர்டில் உள்ள கீறல்களில் கிருமிகள் சேரும். இது டாய்லெட் சீட்டை விட 200 மடங்கு அசுத்தமானது.
கிச்சன் டவல்: ஈரக் கைகளைத் துடைக்கும் கிச்சன் டவலில், டாய்லெட் சீட்டை விட 80 மடங்கு அதிக கிருமிகள் இருக்கின்றன.
குழாய் கைப்பிடி: சமைக்கும்போது அழுக்குக் கையால் திருப்பும் குழாய் கைப்பிடியில் 40 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.