
நெய் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நம் அனைவரும் அறிந்ததே இதனால்தான் உணவில் நெய் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால்தான் சிலர் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுகிறார்கள். ஆயுர்வேதத்திலும் நெய்க்கு தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. உங்களது உணவில் நெய்யை தவறாமல் சேர்த்து வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்த பதிவில் நீங்கள் நெய்யுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சிலவை உள்ளன. காரணம் அவை நன்மைக்கு பதிலாக உங்களது ஆரோக்கியத்திற்கு பல தீங்குகளை தான் விளைவிக்கும் இப்போது நெய்யுடன் எவற்றையெல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நெய்யில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
நெய்யில் அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது தவிர வைட்டமின் ஏ 438 IU, பியூரிக் அமிலம், வைட்டமின் ஈ, வைட்டமின் டி 15 மி.கி, வைட்டமின் கே 1.2 மி.கி, புரதம் 0.04 கிராம், கோலின் 2.7 மி.கி மற்றும் கொழுப்பு 0.04 கிராம், ஒமேகா-6 மொழுப்பு அமிலம் 2.7 மி.கி ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதையும் படிங்க: வெந்நீரில் 1 ஸ்பூன் நெய்; வெறும் வயித்துல குடித்தால் என்னாகும் தெரியுமா?
நெய்யுடன் சேர்த்து சாப்பிட கூடாதவை:
டீ & காபி:
நீங்கள் ஒருபோதும் நெய்யுடன் டீ அல்லது காபி எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் உங்களது செரிமானத்தில் மோசமான விளைவை சந்திப்பீர்கள் அதாவது அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தேன்:
ஆயுர்வேதத்தின் படி நெய்யுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லதல்ல ஏனெனில் இவை இரண்டில் இருக்கும் தன்மையானது ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரானது என்பதால், அவை உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீன்:
மீன் சாப்பிடும்போது நெய் ஒருபோதும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது அது நாள் உங்களது செரிமானத்தில் மோசமான விளைவை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் இவை இருந்தால் சிலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது தவிர உடலில் நச்சுக்களையும் உருவாக்கும்.
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சாப்பிடும்போது நெய் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் புளிப்பு பழங்களுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் மட்டுமின்றி வாயு, வயிற்று உப்புசம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
தயிர்:
தயிர் மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இவை இரண்டில் இருக்கும் தன்மையானது வேறுபட்டவை. இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி சாப்பிட்டால் செரிமானம் ஆவதில் சிரமம் ஆகும்.
இதையும் படிங்க: இந்த '6' பிரச்சினை உள்ளவங்க வெறும் வயிற்றில் மறந்தும் நெய் சாப்பிடாதீங்க!!