
தற்போது குளிர்காலம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும், குளிரும் தீவிரமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த பருவத்தில் உடல்நல பிரச்சனைகள் வருவது இயற்கையானது. அதிலும் குறிப்பாக இந்த சீசனில் பல வகையான சரும பிரச்சனைகள் அதிகமாகவே வரும். அதாவது, சருமத்தில் வறட்சி பாதம் மற்றும் உதடு வெடிப்பு போன்ற பலவிதமான பிரச்சனைகளை சந்திப்போம். எனவே, அவற்றை தவிர்க்க பலர் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இருப்பினும், அவை அனைத்தும் நிரந்தரம் அல்ல. இந்த பிரச்சினைகளில் இருந்து நீங்கள் விடுபட பலவிதமான அழகு சாதனை பொருட்களை பயன்படுத்துவதற்கு, பதிலாக இயற்கை முறையில் அவற்றை சரி செய்து விடலாம் தெரியுமா?
ஆம், குளிர்கால சரும பிரச்சனைகளை தவிர்க்க தேங்காய் எண்ணெய் உங்களுக்கு உதவும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. மேலும் இதை நாம் தலைமுடி வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. ஏனெனில், இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், அவை சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்தை வழங்குகிறது. இப்போது குளிர்கால சரும பிரச்சனைகளை தவிர்க்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தேங்காய் எண்ணெய் & காபி தூள்:
குளிர்காலத்தில் உங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு காபித்தூள் சேர்த்து ஃபேஸ் மாஸ்காக போட்டு, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றப்படும் மற்றும் உங்கள் முகம் மென்மையாக மாறும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் முகப்பரு ரொம்ப வருதா? இந்த '1' பொருள் முகத்தை பளிச்னு மாத்திடும்
தேங்காய் எண்ணெய் & கிளிசரின்:
தேங்காய் இணையுடன் சிறிதளவு கிளிசரின் கலந்து உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது உங்களது முகத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் மற்றும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகின்றது.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் முகத்தில் தேன் தடவுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ!
நினைவில் கொள்:
- குளிர்காலமானாலும் சரி, கோடைக்காலம் ஆனாலும் சரி, சருமத்தில் ஈரப்பதம் குறையும் போது பல சரும பிரச்சனைகள் ஏற்படும். எனவே, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள அழகு சாதனை பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களது சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.
- பொதுவாக குளிர்காலத்தில் நாம் தண்ணீர் குறைவாக தான் குடிப்போம். ஆனால் அது தவறு. மேலும் இதனால் சருமம் சீக்கிரமாகவே வறட்சியடைந்து விடும் மற்றும் பல சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே, இந்த சீசனில் உங்களது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நீங்கள் விரும்பினால் தண்ணீர் அதிகம் குடியுங்கள். கூடுதலாக ஆரோக்கியமான உணவையும் சாப்பிடுங்கள்
முக்கிய குறிப்பு: குளிர்காலத்தில் முகத்திற்கு அதிக சோப்பு போடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோப்புகளில் ரசாயனங்கள் இருப்பதால் அவை உங்களது முகத்தில் பல சர்மி பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் முகத்தில் சீக்கிரமாகவே நீரிழப்பு செய்யும்.