
குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் சில சமயங்களில் பெற்றோர் தங்களை அறியாமல் குழந்தைகளிடம் தவறான விஷயங்களை சொல்லி விடலாம் அல்லது தவறானவற்றை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆதரவாக இருங்கள்:
ஒவ்வொரு பெற்று வரும் தங்களது குழந்தை வெற்றி வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே அவர்கள் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்காக அவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களிடம் அன்பாக கோரிக்கை விடுங்கள். நீங்கள் ஒரு கண்டிப்பான பெற்றோராக இருந்தால் உங்கள் பிள்ளைக்கு தேவைப்படும்போது அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுங்கள். மேலும் நீங்கள் அவர்களுடன் எப்போதும் துணையாகவே இருப்பதாக அவர்களுக்கு புரிய வைக்கவும்.
சுதந்திரம் கொடுங்கள்:
பெற்றோர்கள் தங்கள் குழந்தையை நல்ல முறையில் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். எனவே அவர்களது வீட்டு பாடங்களை, அவர்களது வேலைகளை அல்லது அவர்களுக்கு என ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்குதல் போன்ற விஷயங்களை அவர்களே தீர்மானிக்கும்படி நீங்கள் அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். இது நீங்கள் உங்கள் குழந்தைக்கு செய்ய வேண்டிய ஒரு சிறந்த விஷயமாகும்.
அன்பாக இருங்கள் & அக்கறை காட்டுங்கள்:
தற்போது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் ரொம்பவே பிஸியாக இருப்பார்கள். இதனால் குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறோம் என்பதை கூட காட்ட மறந்து விடுகிறோம். எனவே உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு நல்ல பிணைப்பை வலுப்படுத்த நீங்கள் விரும்பினால் அவர்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை கண்டிப்பாக அவர்களிடம் காட்டுங்கள். முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவாக இருப்பதாக சொல்லுங்கள்.
இதையும் படிங்க: குழந்தைகளுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்த பெற்றோர் செய்யக்கூடாத '5' தவறுகள்!
கோபப்படாதீர்கள்:
பொதுவாக குழந்தைகள் ஏதேனும் தவறு செய்து விட்டால் உடனே பெற்றோர்களை ஆகிய நாம் குழந்தைகளிடம் மோசமாக நடந்து கொள்வோம். அதாவது அவர்களை அடிப்பது, அவர்கள் மீது கோபப்படுவது, திட்டுவது போன்றவற்றை செய்து விடுவோம். ஆனால் அது தவறு. எனவே குழந்தைகள் மீது கோபப்படுவதற்கு பதிலாக அவர்கள் செய்தது தவறு என்று அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
இதையும் படிங்க: இந்த '5' விஷயங்களை உங்க குழந்தைங்க பண்றாங்களா? உடனே நிறுத்துங்க!!
மன்னிப்பு கேளுங்கள்:
குழந்தைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் குழந்தை வளர்ப்பில் சில தவறுகளை செய்து விடுகிறார்கள். நீங்களும் உங்களது குழந்தையிடம் ஏதாவது தவறு செய்தால், அது குறித்து உடனே உங்கள் குழந்தையிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள். நீங்கள் இப்படி நடந்து கொள்வதன் மூலம் உங்கள் குழந்தையும் உங்களிடமிருந்து இந்த விஷயத்தை கற்றுக் கொள்வார்கள்.