Pongal Pulli Kollam Designs 2025 in Tamil
பொங்கல் என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோலங்கள் தான். கோலங்கள் இல்லாமல் பொங்கல் பண்டிகை முழுமையடையாது என்று சொல்லலாம். கோலங்கள் வீட்டில் அழகை மட்டுமல்ல மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடையாளப்படுத்துகின்றது.
பொங்கல் நாளில் அதிகாலையில் பெண்கள் எழுந்து தங்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் என்ன கோலம் போடுவது என்பதுதான். எனவே, இந்த பொங்கலுக்கு உங்களுக்காக விதவிதமான சில புள்ளி கோலங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன அவற்றில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதை தேர்வு செய்து நீங்கள் உங்களது வீட்டு வாசலில் போடுங்கள்.
கோலங்களில் புள்ளி கோலம், ரங்கோலி போன்ற பல வகைகள் இருக்கிறது. அவற்றில் புள்ளி கோலம் தான் போடுவதற்கு ரொம்பவே ஈசியாக இருக்கும். அதுவும் கிராமங்களில் இளம் பெண்கள் கோலமிட சிறு குழந்தைகள் அதில் வண்ணமிட்டு மகிழ்வார்கள். இப்படியே பொங்கல் பண்டிகையானது நகரங்களில் கூட இந்த வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
இதையும் படிங்க: Pongal 2025 : இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!!
இன்னும் சில இடங்களில் சாணத்தை கரைத்து, அதை வைத்து வீட்டை நன்றாக மொழுகி பிறகு கோலம் போடுவதையும் வழக்கமாக பின்பற்றுகிறார்கள். இப்படி செய்தால் வீட்டில் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் கிருமிகள் அழிக்கப்படுவதன் நோக்கமாகும். மேலும் அது கிருமிநாசினியாக செயல்படுவதால் வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்கள் ஏதும் ஏற்படாது. இதனால் தான் கோலம் என்பது வெறும் அலங்காரத்திற்கு மட்டும் அல்ல.