
இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளதால் குழந்தைகள் எப்போதுமே அதே தான் விரும்பி சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். சொல்லபோனால், குழந்தைகளுக்கு வண்ணமயமாக இருக்கும் உணவுகள் மீது ஆர்வம் அதிகம். உதாரணமாக நூடுல்ஸ், பிரைடு ரைஸ் போன்றவை ஆகும். ஆனால், இந்த மாதிரியான உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடு. மேலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதுதான் மிகவும் அவசியம்.
பொதுவாக நம் உடல் இயங்குவதற்கு எலும்பு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். நம்முடைய உடலில் இருக்கும் அதிகளவில் இருக்கும் ஒரு கனிமம் எதுவென்றால், அது கால்சியம் தான்.
அந்தவகையில், வளரும் குழந்தைகளின் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு கால்சியம் ஊட்ட சத்து உள்ள உணவுகளை கொடுப்பது மிகவும் அவசியம்.
குழந்தைகளின் வளர்ச்சியில் எலும்புகள் மிகவும் முக்கியமானது. குழந்தைகளின் எலும்பு வலுவாக இருந்தால் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
பால் பால் தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களில் கால்சியம் நிறைந்துள்ளது. ஒருவேளை உங்களது குழந்தைக்கு பால் பிடிக்கவில்லை என்றால், அதற்கு மாறாக அவர்களுக்கு கால்சியம் நிறைந்த வேறு சில உணவுகளை கொடுக்கலாம். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பால் மற்றும் பால் பொருட்களை விரும்ப மாட்டார்கள். எனவே குழந்தைகளுக்கு உணவில் பாலுக்கு பதிலாக அத்தியாவாசிய ஊட்டச்சத்தான கால்சியம் சத்து நிறைந்த 5 உணவுகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: துரித உணவில் கலக்கும் அந்த 'ஒரு' பொருள்.. இரவில் கொடுத்தால் குழந்தைகளுக்கு பேராபத்து!!
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்துள்ள 5 உணவுப் பொருட்கள்:
1. பாதாம் : பாதாம் கால்சியம் நிறைந்த ஒரு சிறந்த மூலமாகும். ஆம், எப்படியெனில், ஒரு கப் பாதாமில் 110 மி.லி. கால்சியம் சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் கொடுத்து வந்தால் அவர்களது நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தி அதிகரிக்கும். எனவே இதை நீங்கள் இரவு தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலை கொடுக்கலாம்.
2. சோயா : சோயாவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது இதை குழந்தைகளின் அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம். கால்சியம் தவிர சோயாவில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: Parenting Tips : குழந்தைகளுக்கு டீ, காபி கொடுக்க சரியான வயது எது தெரியுமா? பெற்றோர்களே அவசியம் தெரிஞ்சுக்கோங்க
3. பச்சை இலை காய்கறிகள் : கீரை பிரக்கோலி முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே அதிகமாகவே உள்ளது இவை அவர்களின் எலும்புகளை வலுவாக வைக்க பெரிதும் உதவுகிறது. ஆகையால், பச்சை இலை காய்கறிகளை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் அவசியம்.
4. ஆரஞ்சு : ஆரஞ்சு கால்சியத்தின் சிறந்த மூலமாகும். ஏனெனில் இதில் 50 மி. கி கால்சியம் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு கடைகளில் ஆரஞ்சு ஜூஸ் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் போட்டு கொடுங்கள்.
5. வெல்லம் மற்றும் வேர்க்கடலை : வளரும் குழந்தைகளுக்கு வெல்லம் மற்றும் வேர்க்கடலை கொடுக்கலாம். இதனால் அவர்களது உடலில் ரத்த பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பது மட்டுமின்றி கால்சியம் சத்தும் அதிகமாகவே கிடைக்கும்.