Best Oils For Neck Pain In Tamil
இன்றைய காலகட்டத்தில் ஏராளமானோர் அடிக்கடி தலைவலி, கால் வலி, முதுகு வலி, தோல்பட்டை வலி, கழுத்து வலி என்று பல வலிகளால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலே சொன்ன படி, பல வலிகளுக்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஆனால், இதுவரை நீங்கள் கழுத்து வலிகான காரணங்கள் மற்றும் இயற்கை வைத்திய முறைகளை பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கான முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
கழுத்து வலி:
தோள்பட்டை மற்றும் கழுத்து இணையும் இடம் மற்றும் முதுகு பகுதியில் மேல் ஏற்படும் வலி தான் கழுத்து வலி ஆகும். கழுத்து வலி ஒருவருக்கு வந்தால் அது அவருக்கு எரிச்சலையும், மிகுந்த சிரமத்தையும், அந்நாள் முழுவதும் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாமல் முடியாமல் செய்துவிடும். சில சமயங்களில் கழுத்து வலியால் தலையைக் கூட அசைக்க முடியாமல் போய்விடும்.
Best Oils For Neck Pain In Tamil
கழுத்து வலி வருவதற்கான காரணங்கள்:
இன்றைய காலகட்டத்தில் கணினி முன் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு தான் கழுத்து வலி முதல் எல்லா வகையான வலிகளும் வரும். மேலும் சிலருக்கு கழுத்து வலி வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் தவறான முறையில், அதுவும் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தாலும் வரும். இது தவிர, பிற காரணங்களும் உள்ளன.
அவை: தூங்கும் நிலை தவறாக இருப்பது அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் கஷ்டம், நீண்ட நேரம் குனிந்தபடியே படிப்பது அல்லது எழுதுவது மற்றும் தலை கழுத்து அல்லது தோள்பட்டையில் காயம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கூட கழுத்து வலி வரும்.
கழுத்து வலி வந்ததற்கான அறிகுறிகள் :
1. கழுத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விறைப்பாக இருப்பது
2. கழுத்துப் பகுதி முழுவதும் ஒரு ஊசி வைத்து குத்துவது போன்ற வலி ஏற்படுவது
3. கழுத்து வலியுடன் தலைவலியும் வரும்
4. கழுத்து வலி வந்தால் எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாமல் போகும்
Best Oils For Neck Pain In Tamil
இயற்கை முறையில் கழுத்து வலியை சரி செய்ய டிப்ஸ்:
கழுத்து வலியில் இருந்து நிவாரணம் அளிக்க பல வழிகள் இருந்தாலும், பாரம்பரிய முறைப்படி அந்த வலியை போக்க சில எண்ணெய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில எண்ணெய்கள் உள்ளன. அவற்றில் இருக்கும் பண்புகள் கழுத்து வலியை போக்குவது மட்டுமின்றி தசைகளை தளர்த்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகின்றது. எனவே இப்போது கழுத்து வலியை போக்க உதவும் சில வகையான எண்ணெய்களைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கழுத்து வலியை போக்கும் எண்ணெய்கள்:
1. தேங்காய் எண்ணெய் : பல ஆண்டுகளாகவே நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. தேங்காய் எண்ணெயில் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவும் பண்புகள் உள்ளன. எனவே தேங்காய் எண்ணை கொண்டு கழுத்து பகுதியில் மசாஜ் செய்து வந்தால் தசைகள் தளர்ந்து விரைவிலேயே கழுத்து வலி குறையும்.
Best Oils For Neck Pain In Tamil
2. கடுகு எண்ணெய் : இந்த எண்ணெய் சூடு தன்மையை கொண்டுள்ளதால், இதை கழுத்து பகுதியில் தடவி வந்தால் தசை பிடிப்பை போக்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். ஆனால் ரொம்பவே சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டாம்.
3. ஆலிவ் எண்ணெய் : வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் பண்புகள் ஆலிவ் எண்ணெயில் உள்ளது. மேலும் இந்த எண்ணை சருமத்தை மென்மையாக்கி, தசைகளை தளர்த்தும். எனவே இந்த எண்ணெயை கழுத்து வலி பகுதியில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் கழுத்து வலி குணமாகும்.
4. எள் எண்ணெய் : எள் எண்ணெய் கொண்டு கழுத்து பகுதியில் மசாஜ் செய்து வந்தால், தசைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் தசை பிடிப்பை குறைக்கும். இதனால் கழுத்து வலி விரைவில் குறையும். இது தவிர இந்த எண்ணெய் சூடு மற்றும் வறட்சியல் ஏற்படும் வலியையும் குறைக்கும்.
இதையும் படிங்க: கழுத்தில் Perfume யூஸ் பண்ணா கழுத்து கருப்பா மாறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Best Oils For Neck Pain In Tamil
5. லாவண்டர் எண்ணெய் : இது ஒரு சிறந்த வலி நிவாரண எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் மன அழுத்தத்தை குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே இந்த எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து கழுத்து வலி பகுதியில் மசாஜ் செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
பயன்படுத்தும் முறை:
உங்களுக்கு கழுத்து வலி இருந்தால் மேலே சொன்ன எண்ணெய்களில் ஏதாவது ஒன்றை சூடுப்படுத்தி, அதை சூடாக இருக்கும் போதே கழுத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் வட்ட வடிவில். அதன்பிறகு சூடான துணியை கழுத்து பகுதியில் வைத்து எடுக்கவும். இதனால் தசைகள் தளர்ந்து வலி குறைய ஆரம்பிக்கும். இப்படியே நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி விரைவில் குணமாகும்.
இதையும் படிங்க: Neck pain: உங்களுக்கு நாள்பட்ட கழுத்து வலி இருக்கா....? சரிசெய்ய உதவும் 5 யோகா பயிற்சிகள்!