இன்றைய மேற்கத்திய உணவு கலாசாரத்தில், காலையில் சமைத்த உணவை இரண்டு, மூன்று நாட்கள் பிரிட்ஜில் வைத்து, பின்னர் மீண்டும் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது..சமைத்த உணவு வீணாகி விட கூடாது என்பதற்காக இது போன்ற செயல்களை நாம் செய்கிறோம்..
உண்மையில், நம்முடைய வயிறு ஒன்றும் குப்பை தொட்டி கிடையாது..? பொருட்களை வீணாக்காமல் வயிற்றில் கொட்டுவதற்கு, மாறாக நீங்கள் அளவான உணவை சமைத்து சாப்பிடலாம். இல்லையென்றால் வீணாகாமல் மற்றவர்களுக்கு உணவு கொடுத்து உண்ண வைக்கலாம்..இதனால், புண்ணியமும் உங்களுக்கு வந்து சேரும்..உடல் ஆரோக்கியமும் மேம்படும்..
35
Microwave Oven:
ஒருமுறை சூடுபடுத்திய உணவை மீண்டும் சூடுபடுத்துவதே தவறு என்னும் நிலையில், அதனை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தி சாப்பிடுவதால், உடலுக்குப் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிகின்றனர்.
ஏனெனில், மைக்ரோவேவ் ஓவன்கள், எலக்ட்ரோமேக்னடிக் கதிரியக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிலையில், அதில் சமைக்கப்படும் உணவுகள், அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படுகின்றன.
45
Microwave Oven:
இதனால், உணவுகளில் உள்ள சத்துக்கள் ஒழுங்கற்று பிரிவதால், அதில் பைஸ்பினால் என்ற நச்சுப்பொருள் உருவாகிறது. இந்த அதீத வெப்பமானது, உணவில் உள்ள சத்துக்களை ஒழுங்கற்று பிரிக்கின்றது. இதனால், உணவுகளின் முழு பலன்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன. அதுமட்டுமின்று, இது, பல்வேறு வகை புற்றுநோய்களை ஏற்படுத்துவததாக கூறப்படுகிறது.
55
Microwave Oven:
இந்த நச்சுப் பொருள், மார்பக புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை ஏற்படுத்த முக்கிய காரணமாக அமைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இதன் பாதிப்பை அதிகளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் குறைக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.