நீதா அம்பானி எப்போதும் அவருடைய ஆடை அணிகலன்களால் கவனம் ஈர்ப்பார். அவர் அணிந்திருக்கும் புடவைகளில் இந்திய உடைகளின் வசீகரம் கண்ணை கவரும். அதைப் போலவே வெள்ளை மாளிகை விருந்தில் நீதா அம்பானி பட்டுப் புடவை அணிந்திருந்தார். இந்த புடவையை நெய்து முடிக்க ஒரு மாத காலம் ஆனதாம். வாரணாசியிலில் வடிவமைத்த பனராசி ப்ரோகேட் என்ற கைத்தறி புடவையை அணிந்திருந்தார்.