Kanjivaram Silk Sarees : காஞ்சிபுரம் பட்டுப் புடவைங்கிறது நம்ம பாரம்பரியத்தோட அடையாளம். ஆனா, அதைப் பத்திரமா பார்த்துக்கிறது பெரிய டாஸ்க். அதை பாதுகாப்பா வச்சிருக்க, சில சூப்பர் டிப்ஸ் இதோ.
உங்க அம்மா, பாட்டியோட பழைய காஞ்சிபுரம் புடவையை நீங்களும் கட்டுறீங்களா? அவங்க அதை அவ்வளவு பத்திரமா பார்த்துக்கிட்டதாலதான் இன்னைக்கும் அது புதுசு மாதிரி இருக்கு. அதை எப்படி சரியா பராமரிக்கிறதுனு தெரியலையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.
29
புடவைகளை பாதுகாப்பது எப்படி?
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் வெறும் துணி இல்லை, அது ஒரு தலைமுறை சொத்து. சின்னச்சின்ன விஷயங்கள்ல கவனம் வெச்சா போதும், அதோட பளபளப்பும் அழகும் வருஷக்கணக்கா அப்படியே இருக்கும். அதுக்கான சில டிப்ஸ் இங்க இருக்கு.
39
டிப்ஸ் 1
காஞ்சிபுரம் புடவைகளை எக்காரணம் கொண்டும் ஹேங்கர்ல மாட்டி வைக்காதீங்க. இந்த புடவைகள்ல இருக்கிற ஜரிகை ரொம்ப கனமா இருக்கும். நீங்க ஹேங்கர்ல மாட்டினா, ஜரிகையோட எடை புடவையை கீழ்நோக்கி இழுத்து, புடவையோட ஷேப்பே மாறிடும்.
உங்க காஞ்சிபுரம் புடவையை அப்படியே திறந்து வைக்காதீங்க. ஈரப்பதம், பிளாஸ்டிக் கவர்கள்ல இருந்து தள்ளி வைக்கிறது ரொம்ப நல்லது. ஒரு மென்மையான காட்டன் அல்லது மஸ்லின் துணியில மடிச்சு வைங்க. முடிஞ்சவரைக்கும் வெள்ளை நிறத் துணியைப் பயன்படுத்துங்க, இல்லைனா மத்த துணியோட சாயம் புடவையில ஒட்ட வாய்ப்பிருக்கு.
59
டிப்ஸ் 3
காஞ்சிபுரம் புடவையோட சேர்த்து நாப்தலீன் உருண்டைகளை (அந்துருண்டை) எப்பவும் வைக்காதீங்க. இது புடவையை பாதிக்கும். அதுக்கு பதிலா, லாவெண்டர் பூக்கள், வேப்பிலைகள் போன்ற இயற்கையான வாசனைப் பொருட்களை ஒரு மஸ்லின் பைல போட்டு, பீரோவுல வைங்க.
69
டிப்ஸ் 4
புடவை ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னா, ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் ஒருமுறை அதை எடுத்து, மடிப்பை மாத்தி வைங்க. இப்படிச் செய்யும்போது ஜரிகை மடிப்புலேயே இருந்து உடைஞ்சு போகாம இருக்கும். இதனால புடவை ரொம்ப நாளைக்கு உழைக்கும்.
79
டிப்ஸ் 5
காஞ்சிபுரம் புடவையைக் கட்டிட்டு வந்ததும், ஒரு நாள் முழுக்க நிழல்ல காய வைங்க. காத்துல உலர்ந்தா போதும். ஆனா, நேரடி சூரிய ஒளி படுற மாதிரி மட்டும் காயப் போடாதீங்க. அப்படி செஞ்சா புடவையோட பளபளப்பு குறைஞ்சிடும்.
89
டிப்ஸ் 6
புடவையை அயர்ன் பண்ணும்போது, ஜரிகை மேல நேரடியாக அயர்ன் பாக்ஸை வைக்காதீங்க. அது ஜரிகையை டேமேஜ் ஆக்கிடும். அதுக்கு பதிலா, ஜரிகை மேல ஒரு மென்மையான காட்டன் துணியை வெச்சு, அதுக்கு மேல அயர்ன் பண்ணுங்க.
99
டிப்ஸ் 7
இதுதான் கடைசி மற்றும் முக்கியமான டிப்ஸ். மாசத்துக்கு ஒருமுறையாவது உங்க காஞ்சிபுரம் புடவையைக் கட்டுங்க. கோயில், விசேஷம், பூஜைனு ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சியில கட்டுங்க. ஏன்னா, நீங்க புடவையை எந்த அளவுக்கு அதிகமா பயன்படுத்துறீங்களோ, அந்த அளவுக்கு அது ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கும்.