Trending Jewellery designs : ஓணம் டிரெண்டிங் ஜுவல்லரி கலெக்‌ஷன்..உங்க பேவரட் எது?

Published : Aug 26, 2026, 06:33 PM IST

Jewellery designs: ஓணம் பண்டிகயை கொண்டாடிய பிரபலங்கள் தங்கள் லுக்கை மேலும் அழகாக்க பல்வேறு டிரெண்டிங் ஜுவல்லரிகளை அணிந்திருந்தனர். இந்த டிசைன்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த நகை டிசைன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
19
பச்சை நிற எமரால்டு சோக்கர்

நடிகை அபிராமி அணிந்திருக்கும் பச்சை நிற எமரால்டு சோக்கர் பாரம்பரியமும் நவீனமும் கலந்த அழகான மாடலாக உள்ளது. சோக்கரில் வட்ட வடிவிலான பச்சை எமரால்டு கற்கள் ஒன்றன்பின் ஒன்றாக நேர்த்தியாக பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லுக்கும் நடுவே இடம்பெற்றுள்ள சிறிய தங்க மணிகள், நகையின் டிசைனுக்கு கூடுதல் அழகையும் நுட்பமான தோற்றத்தையும் வழங்குகின்றன.

இதனுடன் அணிந்திருக்கும் பச்சை கல் பதித்த ஜிமிக்கியும் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. கீழ்பகுதியில் குடை வடிவில் தொங்கும் பாரம்பரிய வேலைப்பாடும், அதைச் சுற்றி இடம்பெற்றுள்ள சிறிய தங்க மணிகளும் ஜிமிக்கிக்கு அழகான ஹைலைட்டை கொடுக்கின்றன.

29
லட்சுமி பெண்டன்ட் காசு மாலை

பாரம்பரிய தென்னிந்திய நகை அலங்காரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த செயின் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய தங்கக் காசுகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். செயினின் மையத்தில் இடம்பெற்றுள்ள வட்ட வடிவ லட்சுமி பெண்டன்ட், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. காதுகளில் அணிந்திருக்கும் ஜிமிக்கி, பாரம்பரிய கோயில் நகை பாணியை நினைவூட்டுவதுடன், ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் அழகையும் நேர்த்தியையும் சேர்க்கிறது.

39
ரூபி நிற சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட தங்க சோக்கர்

கழுத்தை ஒட்டி அணியும் தங்க சோக்கர் பல அடுக்கு நுணுக்கமான சங்கிலி வடிவில் அமைந்துள்ளது. நடுவில் மலர் வடிவ அலங்காரத்தில் ரூபி நிற சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சோக்கரின் மையத்தில் வட்ட வடிவ பெண்டன்ட் இடம்பெற்றுள்ளது. அதில் பல சிறிய சிவப்பு/மெரூன் கற்கள் வட்டமாக பதிக்கப்பட்டிருப்பது தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது.

சோக்கருக்கு கீழே நீளமான தங்கச் செயினில் மெரூன் ரூபி சிவப்பு கற்கள் மற்றும் முத்து வெள்ளை நிறம் இணைந்திருப்பது நகைக்கு செழுமையான தோற்றத்தை அளிக்கிறது.

49
எமரால்டு பச்சை சோக்கர்

மெல்லிய தங்கச் செயின் அடுக்குகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சோக்கர் மாடல், பாரம்பரியத்தையும் நேர்த்தியையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது. சோக்கரின் கீழ்பகுதியில் இடம்பெற்றுள்ள சிறிய தங்க மணிகள், நகைக்கு கூடுதல் அழகையும் நுணுக்கமான வேலைப்பாடையும் சேர்க்கின்றன.

சோக்கரில் பதிக்கப்பட்டுள்ள ஆழமான எமரால்டு பச்சை நிறக் கற்கள், தங்கத்தின் மஞ்சள் நிறத்துடன் அழகான கான்ட்ராஸ்ட்டை உருவாக்குகின்றன. காதுகளில் அணிந்திருக்கும் சிறிய அளவிலான தங்க ஜிமிக்கி, எளிமையான கோயில் நகை பாணியை பிரதிபலிக்கிறது.

59
கண்ணைக் கவரும் சோக்கர்

கழுத்தை ஒட்டி அணிந்துள்ள இந்த சோக்கர், பல அடுக்குகளில் சிறிய தங்க மணிகள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நுணுக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தங்க நிறத்துடன் சிவப்பு, பச்சை கற்கள் இணைந்திருப்பது நகைக்கு பாரம்பரியமும் கண்ணைக் கவரும் அழகும் சேர்க்கிறது. குறிப்பாக, சிவப்பு கற்கள் தங்க நிறத்துடன் அழகான கான்ட்ராஸ்ட்டை உருவாக்குகின்றன.

69
அடுக்கு நெக்லஸ்

பல அடுக்குகளில் அமைந்த இந்த பாரம்பரிய நெக்லஸில் வெள்ளை முத்து, ரூபி சிவப்பு மற்றும் எமரால்டு பச்சை கற்கள் அழகாக இணைக்கப்பட்டுள்ளன. கீழ்பகுதியில் தொங்கும் பச்சை கற்கள், நகைக்கு தனித்துவமான மற்றும் ரிச்சான தோற்றத்தை வழங்குகின்றன.

79
பல அடுக்கு காசுமாலை

கழுத்தில் பல அடுக்குகளைக் கொண்ட அழகிய தங்கக் காசுமாலை நெக்லஸ். நெக்லஸில் சிறிய வட்ட வடிவ மணிகள், கற்கள் மற்றும் நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் உள்ளன

89
முத்து நெக்லஸ்

நெக்லஸில் பிங்க் மற்றும் வெள்ளை நிற கற்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன. நெக்லஸிற்கு ஏற்றவாறு, பிங்க் மற்றும் வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்ட தங்கக் காதணிகள் அணிந்துள்ளது கூடுதல் அழகைன் அளிக்கிறது.

99
தங்கக் காசு மாலை

தங்கக் காசு மாலையில் சிறிய, வட்ட வடிவ தங்கக் காசுகள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காசுக்கும் நடுவில் ஒரு சிறிய சிவப்பு நிறக் கல் பதிக்கப்பட்டுள்ளது. மாலைக்குக் கீழே தட்டையான, வட்ட வடிவத் தங்கக் காசுகள் தொங்குகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories