
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் அனிருத் இசையில் உள்ள படம் விக்ரம். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.
நட்சத்திர பட்டாளங்கள்:
விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம் பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் படபிபிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா:
ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட மாஸ் வேலைகளை மும்மரப்படுத்தி வருகிறது. விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா வருகிற மே 15-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல்:
அதன்படி அண்மையில் கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் ரெயில் முழுவதும் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் சிங்குளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கமலின் நடனத்தில் 'பத்தல பத்தல' பாடல் வெளியீடு:
அதோடு, அனிருத் இசையில் 'விக்ரம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'பத்தல பத்தல' பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. அதற்காக கமல் குத்தாட்டம் போடும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இதனால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
கலக்கும் கமல்:
அந்த வகையில், தற்போது விக்ரம் படத்தின் முதல் பாடலான 'பத்தல பத்தல' என்ற பாடல் இன்று மாலை 7:30 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் கமல்ஹாசனே எழுதி, பாடி இருக்கிறார். இந்த பாடலுக்கு சட்டையை கழட்டி கழுத்தில் சுற்றிக் கொண்டு தர லோக்கலாக கமல் குத்தாட்டம் போட்டுள்ளார்.