Samantha Video: KRK படம் குறித்து முதன் முதலில் மனம் திறந்த சமந்தா...வெற்றி களிப்பில் இருக்கும் கதீஜா வீடியோ..

Anija Kannan   | Asianet News
Published : May 02, 2022, 02:24 PM IST
Samantha Video: KRK படம் குறித்து முதன் முதலில் மனம் திறந்த சமந்தா...வெற்றி களிப்பில் இருக்கும் கதீஜா வீடியோ..

சுருக்கம்

Samantha Video: காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதால், நடிகை சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன இந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும். விமர்சன ரீதியாவும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனது 25 வது படத்திற்கு அனிருத் இசை:


 இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. 

முக்கோண காதல் கதை:

முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக 
விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சமந்தா பீவர்:

இந்த படம் வெளியான முதலே எல்லோரும், சமந்தா பீவர் பிடிப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கதிஜா பாத்திரத்தில் நடித்த சமந்தாவிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமந்தா தன்னுடைய படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சமந்தா வீடியோ:

அதில் அவர், காத்துவாகுல ரெண்டு காதல் படத்துக்கு அமோக வரவேற்பு கொடுத்ததற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களது வரவேற்பை நான் நேரில் இருந்து பார்க்க ஆசைப்படுகிறேன். உங்களின் வரவேற்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. உங்களின் அன்புக்கு  மிக்க நன்றி" என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடித்துள்ளனர். 

 மேலும் படிக்க....ஆலியா பட்டுக்கு தேசிய விருது? கங்குபாய் படத்தை வர்ணித்த பிரபல இயக்குநர் ...ஆனால், இது மட்டும் இல்லாமல் போச்சே.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?