
80-களின் கனவு நாயகி ஸ்ரீ பிரியா, கோலிவுட்டில் மிக முக்கிய பிரபலமாக இருந்தவர். இவர் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் , ரஜினிகாந்த் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தவர். அதுமட்டுமின்றி, அப்போதைய சூப்பர் ஹிட் நாயகி, ஸ்ரீதேவிக்கு இணையாக போட்டி போட்டு பல்வேறு படங்களில் ஹிட் கொடுத்துள்ளார்.
80-களின் கனவு நாயகி ஸ்ரீ பிரியா:
இவர் தமிழ் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் 300 க்கும் அதிகமான திரைப் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது.
பின் சிறிது காலம் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மீண்டும் இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஸ்ரீபிரியா, 1988-ஆம் ஆண்டு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஸ்ரீபிரியா -ராஜ்குமார் தம்பதிக்கு சினேகா மற்றும் நாக அர்ஜூன் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்:
இதில் சினேகா சென்னையில் பிறந்தவர். இவர் லண்டனில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்தார். சினேகா, தற்போது அன்மோல் ஷர்மா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் லண்டன் பேங்க் ஆஃப் இந்தியாவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
கலந்து கொண்ட முக்கிய சினிமா பிரபலங்கள்:
இந்நிலையில் தென்னிந்தியர்கள் முறைப்படி, நேற்று சென்னையில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைப்பெற்றது. இதில் சரத் குமார், ராதிகா சரிதா, சுஹாசினி, உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே, சினேகா மற்றும் அன்மோல் ஷர்மா திருமணம் சட்டப்படி லண்டனில் பதி்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.