Ajith: தல டக்கரு டோய்! அஜித்தின் 61வது படத்தின் அப்டேட் கேட்டு குஷியான ரசிகர்கள்! படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

Published : Apr 07, 2022, 03:55 PM IST
Ajith: தல டக்கரு டோய்! அஜித்தின் 61வது படத்தின் அப்டேட் கேட்டு குஷியான ரசிகர்கள்! படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

சுருக்கம்

Ajith: வலிமை, மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஐதராபாத்தில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை, மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஐதரா பாத்தில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் நடிப்பில், கடந்த பிப்ரவரி 24 இம்தேதி வெளியாகிய வலிமை திரைப்படம்ரசிகரின் ஏகோபித்த வரவேற்பை பெற்று தந்தது. சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் 200 கோடி வெற்றியை தொட்டு சாதனை படைத்தது. 

வலிமை வெற்றி:

நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவான திரைப்படம் வலிமை. இதில், அஜித்தை தாண்டி நிறைய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்தின் கதை, நடிகர்களை தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் தான் அதிகம் ரசிக்கப்பட்டன.

மீண்டும் அஜித் -எச்.வினோத் கூட்டணி:

இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். பூஜை போடப்பட்ட ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.  பல ஆண்டுகள் கழித்து அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

‘அஜித் 61’ படப்பிடிப்பு:

இந்நிலையில், தற்போது படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வந்துள்ளது. மொத்தம் படப்பிடிப்பு 75 நாட்கள் நடக்குமாம். அதில் சென்னையில் 7ல் இருந்து 10 நாட்கள் நடக்குமாம். இதையடுத்து, வரும் 9ம் தேதி படப்பிடிப்பு ஐதரா பாத்தில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்படுகிறது.

அஜித் 62:

அஜித் 61 படத்திற்கு பிறகு, லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் 62 படத்தில் நடிக இருக்கிறார். இதில், அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய முக்கிய  அறிவிப்பினை, விக்னேஷ் சிவன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?