ஐபிஎல் 2020: சபாஷ் தலைவா.. பின்ன, பாண்டிங்னா சும்மாவா..? தரமான யோசனைக்கு சேவாக் ஆதரவு

First Published Oct 25, 2020, 1:35 PM IST

டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும் லெஜண்ட் கிரிக்கெட்டருமான ரிக்கி பாண்டிங்கின் யோசனைக்கு சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில், தலைமை பயிற்சியாளர் லெஜண்ட் ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலில் ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில் களம் கண்ட டெல்லி கேபிடள்ஸ் அணி அருமையாக ஆடி வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறுவதை உறுதி செய்துவிட்டது.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள நிலையில், தொடர் வெற்றிகளை பெற்றுவந்த டெல்லி கேபிடள்ஸ் அணி, கடந்த 2 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவியது. கடந்த ஒருசில போட்டிகளில் டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை.
undefined
முதல் ஆறு போட்டிகளில் 198 ரன்கள் அடித்த பிரித்வி ஷா, அவரது கடைசி 4 இன்னிங்ஸ்களில் 2 டக் அவுட்டுகளுடன் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். அவர் ஃபார்மில் இல்லாமல் சொதப்பிவந்த நிலையில் அவருக்கு தன் தவறுகளை யோசித்து திருத்திக்கொள்ள நேரம் கொடுக்கும் விதமாக, ஒரு சிறிய பிரேக் கொடுக்கப்பட்டது. அதனால், கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியில் பிரித்வி ஷா ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே ஆடினார்.
undefined
இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணியை பார்ப்போம். டெல்லி கேபிடள்ஸ் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷாவிற்கு, கேகேஆருக்கு எதிரான போட்டியில் ரன் ஓடும்போது ஃபீல்டர் விட்ட த்ரோவில் காலில் அடிபட்டது. அதனால் அவர் அந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஃபீல்டிங் கூட செய்யவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே தான் ஃபீல்டிங் செய்தார்.
undefined
பிரித்வி ஷாவுக்கு பதிலாக களமிறங்கிய ரஹானேவும் டக் அவுட் தான் ஆனார். கேகேஆரிடம் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனாலும் பிரித்வி ஷாவுக்கு அந்த பிரேக் தேவை என்றவகையில், அதை செய்தார் ரிக்கி பாண்டிங்.
undefined
ரிக்கி பாண்டிங்கின் நடவடிக்கை சரியானதுதான் என சேவாக் தெரிவித்துள்ளார். பிரித்வி ஷாவுக்கு பிரேக் கொடுத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், ரிக்கி பாண்டிங் பிரித்வி ஷாவுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் அதேவேளையில் பிரித்வி ஷா கடந்த சில போட்டிகளில் சரியாக ஆடாமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். மோசமான ஃபார்மில் இருப்பதால் அவருக்கு பிரேக் கொடுத்திருக்கிறார் பாண்டிங்.
undefined
சில நேரங்களில் வீரர்கள் மன வலிமை பெறவும், தனது தவறுகளை ஆராய்ந்து திருத்திக்கொண்டு அதிலிருந்து மீண்டு வரவும் இந்த பிரேக் தேவை. அந்த பிரேக்கை, ஒரு வீரர் அவராகவே எடுத்துக்கொள்ளலாம் அல்லது வேறு யாராவது கொடுக்கலாம். பிரித்வி ஷாவிற்கு பாண்டிங் அந்த பிரேக்கை கொடுத்திருக்கிறார். எனவே பிரித்வி ஷாவுக்கு பிரேக் கொடுக்க வேண்டும் என்ற பாண்டிங்கின் முடிவு மிகச்சிறந்த முடிவு என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
undefined
click me!