ஐபிஎல் 2020: என்னது அவரு இன்னக்கி ஆடுறாரா..? செம குஷியில் ரசிகர்கள்.. சவாலை சமாளித்த சன்ரைசர்ஸ்

First Published Sep 26, 2020, 5:23 PM IST

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று அபுதாபியில் நடக்கும் போட்டியில் கேகேஆரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.
undefined
இன்றைய போட்டியில் மோதும் இரு அணிகளுமே அதன் முதல் போட்டியில் தோற்றன. சன்ரைசர்ஸ் ஆர்சிபியிடமும், கேகேஆர் மும்பை இந்தியன்ஸிடமும் தோற்றன. எனவே இரு அணிகளுமே முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. அதனால் போட்டி கடுமையாக இருக்கும்.
undefined
சன்ரைசர்ஸ் அணி பெரும்பாலும் அதன் டாப் ஆர்டர் வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவையே அதிகமாக சார்ந்துள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது.
undefined
கடந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் ஆடியதால் கேன் வில்லியம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதால், இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் இறங்குவதற்கு வாய்ப்பு அதிகமாகவுள்ளது.
undefined
வார்னர், பேர்ஸ்டோ, ரஷீத் கான் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களும் ஆடும் லெவனில் ஆடுவது உறுதி. எஞ்சிய ஒரு இடத்தில் கேன் வில்லியம்சன் அல்லது நபி ஆகிய இருவரில் ஒருவர் இறக்கப்படுவார். இதன்மூலம் அந்த அணியின் பேலன்ஸ் சிறப்பானதாக அமையும்.
undefined
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆர்சிபிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் தோற்றது.
undefined
click me!