ஐபிஎல் 2020: ஆரம்பத்தில் சீன் போட்டு அப்புறம் சரண்டரான சிஎஸ்கே..! அவரை மிஸ் பண்றோம்னு ஓபனா ஒப்புக்கொண்ட கோச்

First Published Sep 26, 2020, 4:50 PM IST

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்கள் இருவர் ஆடாதது தான் சிஎஸ்கே அணியின் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 3 முறை சாம்பியனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியுமான சிஎஸ்கேவிற்கு இந்த சீசன் சரியான தொடக்கமாக அமையவில்லை.
undefined
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அம்பாதி ராயுடுவின் புண்ணியத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அவர் ஆடாத அடுத்த 2 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 176 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டமுடியாமல் 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
undefined
இந்த சீசனில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ரெய்னா ஆடாதது, சிஎஸ்கே அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னா ஆடாததன் விளைவு, சிஎஸ்கே போட்டி முடிவுகளில் எதிரொலிக்கிறது.
undefined
சிஎஸ்கே அணி, பேட்டிங், ஸ்பின் பவுலிங், டெத் பவுலிங் என அனைத்து வகையிலுமே சொதப்பிவருகிறது. இந்நிலையில், ரெய்னா இல்லாதது பெரும் இழப்பு என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
undefined
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசிய ஸ்டீஃபன் ஃப்ளெமிங், சில முக்கியமான வீரர்களை நாங்கள் மிஸ் செய்கிறோம். அதேவேளையில் அவர்கள் இடத்தை நிரப்பி அணியின் பேலன்ஸை ஈடுகட்டும் முயற்சியிலும் இருக்கிறோம். ரெய்னா, ராயுடு ஆடாதது பேட்டிங் ஆர்டரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான மாற்று வழியையும் காம்பினேஷனையும் உருவாக்கிவருகிறோம் என்று ரெய்னா இல்லாதது இழப்புதான் என்ற உண்மையை வெளிப்படையாக ஃப்ளெமிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
undefined
ஆரம்பத்தில் ரெய்னா இல்லாதது பெரிய இழப்பு இல்லை என்பதை போல சீனை போட்ட சிஎஸ்கே இப்போது, ரெய்னாவை மிஸ் செய்வதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
undefined
click me!