ஐபிஎல் 2020: சிஎஸ்கேவின் தோல்விக்கு மறுபடியும் இவங்கதான் காரணம்..! தோனி செம கடுப்பு

First Published | Sep 26, 2020, 2:20 PM IST

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்ததற்கான காரணத்தை தோனி தெரிவித்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு இந்த சீசனின் தொடக்கம் சிறப்பாக இல்லை. இந்த சீசனில் ரெய்னா ஆடாத நிலையில், அதன் தாக்கம் சிஎஸ்கேவில் கடுமையாக உள்ளது.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில், அம்பாதி ராயுடுவின் அதிரடியான அரைசதத்தால் வென்ற சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் ராயுடு ஆடாததால், படுமோசமாக சொதப்பி, 2 போட்டிகளிலுமே படுமோசமாக தோற்றது.
Tap to resize

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சிஎஸ்கே அணி, டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 176 ரன்கள் என்ற இலக்கைக்கூட அடிக்கமுடியாமல் 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
டுப்ளெசிஸை தவிர வேறு யாருமே சரியாக ஆடுவதில்லை. ஷேன் வாட்சனுக்கு இன்னும் முமெண்டம் கிடைக்கவில்லை. முரளி விஜயை அணியில் எடுப்பதற்கு எடுக்காமலேயே இருக்கலாம். அடுத்த போட்டியில் ராயுடு ஆடுவார் என்பதால் முரளி விஜய் ஒதுக்கப்படுவார். இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தனக்கு கிடைத்த 2 அரிய வாய்ப்புகளையும் வீணடித்துவிட்டார். ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணியே சிதைந்து போய் கிடக்கிறது.
அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின், ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் டெவாட்டியா, சாஹல் என எதிரணி ஸ்பின்னர்கள் அசத்தலாக வீசிவரும் நிலையில், சிஎஸ்கேவின் சீனியர் ஸ்பின்னர்களான ஜடேஜாவும் சாவ்லாவும் சொதப்பிவருகின்றனர். அனைத்துவகையிலுமே படுமோசமாக சொதப்பி 2 படுதோல்விகளை சிஎஸ்கே பெற்றுள்ளது.
இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, எங்களுக்கு இந்த போட்டி சரியானதாக அமையவில்லை. பேட்டிங்கில் குறைபாடுகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் அமையாததால், போகப்போக தேவைப்படும் ரன்ரேட் எகிறுகிறது; அதனால் அழுத்தமும் அதிகரிக்கிறது. பிரச்னைகளை கண்டறிந்து களைய வேண்டியிருக்கிறது. மெதுவான தொடக்கம், ஆட்டத்தின் பிற்பாதியில் அழுத்தத்தை அதிகரித்துவிடுகிறது என்றார் தோனி. இதே காரணத்தை கடந்த போட்டியின் போதும் சுட்டிக்காட்டினார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே முரளி விஜய் படுமந்தமாக தொடங்கி, ஆனால் செட்டில் ஆகிவிட்டு அதை ஈடுசெய்யாமல், பந்துகளை வீணடித்துவிட்டு, அப்படியே அவுட்டும் ஆகிவிடுகிறார். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட, 15 பந்தில் வெறும் 10 ரன்கள் அடித்து நடையை கட்டினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பவர்ப்ளேவை பயன்படுத்தி அடித்தும் ஆடுவதில்லை; அதேவேளையில் பந்தையும் வீணடித்துவிட்டு சென்றால், பின்வரிசை வீரர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. அதைத்தான் தோனி சுட்டிக்காட்டினார்.

Latest Videos

click me!