தோனிக்கே ஷாக் கொடுத்த சன்ரைசர்ஸ் இளம் வீரர்கள்..! பிரியம் கர்க் அதிரடி அரைசதம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு

First Published Oct 2, 2020, 9:40 PM IST

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 164 ரன்களை குவித்து 165 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸும் ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவை அருமையான இன்ஸ்விங்கின் மூலம் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் தீபக் சாஹர். அதன்பின்னர் களத்திற்கு வந்த மனீஷ் பாண்டே, ஒரு சில பெரிய ஷாட்டுகளை ஆடி அசத்தினார். ஆனால் வழக்கம்போலவே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 21 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
undefined
அதன்பின்னர் வார்னர் 11வது ஓவரில் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரில் வில்லியம்சன் 9 ரன்களுக்கு ரன் அவுட்டானார். 11 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 69 ரன்களுக்கே முக்கியமான 4 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
undefined
ஆனால் அதன்பின்னர் இளம் வீரர்களான பிரியம் கர்க்கும் அபிஷேக் ஷர்மாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். 12, 13, 14 ஆகிய ஓவர்களில் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் பில்ட் செய்த கர்க்கும் அபிஷேக்கும் அதன்பின்னர் அடித்து ஆடினர்.
undefined
குறிப்பாக சாம் கரன் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களை விளாசினார் பிரியம் கர்க், அருமையாக ஆடி அரைசதம் அடித்த கர்க், கடைசிவரை களத்தில் நின்று 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் அடித்தார். அபிஷேக் ஷர்மா 31 ரன்கள் அடித்து 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் சிறப்பாக வீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் தாகூர். இதையடுத்து 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த சன்ரைசர்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது,
undefined
11 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 69 ரன்களுக்கு முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 164 ரன்கள் என்ற ஸ்கோரை தோனியே எதிர்பார்த்திருக்க மாட்டார். அதிகபட்சம் 140 ரன்களுக்கு சுருட்டிவிடலாம் என்றுதான் எதிர்பார்த்திருப்பார். ஆனால் பிரியம் கர்க்கும் அபிஷேக் ஷர்மாவும் அருமையாக ஆடினர்.
undefined
click me!