ஐபிஎல் 2020: என்னது சன்ரைசர்ஸின் மேட்ச் வின்னரே இன்னக்கி மேட்ச்ல ஆடலையா..? வார்னர் படைக்கு கடும் பின்னடைவு

First Published Oct 4, 2020, 1:26 PM IST

மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.
undefined
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சிஎஸ்கேவும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.
undefined
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுமே, இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்று முறையே புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4ம் இடங்களில் இருக்கின்றன.
undefined
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கிறது. இரு அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள் இருப்பதால், சிறிய மைதானமான ஷார்ஜாவில் போட்டி நடப்பதால், கண்டிப்பாக சிக்ஸர் மழை இருக்கிறது என்பது உறுதி.
undefined
இந்த போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர சீனியர் ஃபாஸ்ட் பவுலரான புவனேஷ்வர் குமாருக்கு, சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டதால் கடைசி ஓவரை முழுமையாகக்கூட வீசாமல் களத்திலிருந்து வெளியேறினார். எனவே அவர் இன்றைய போட்டியில் ஆடமாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் சந்தீப் ஷர்மா அல்லது சித்தார்த் கவுல் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படுவார்.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்:டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ரஷீத் கான், சந்தீப் ஷர்மாசித்தார்த் கவுல், கலீல் அகமது, டி.நடராஜன்.
undefined
click me!