DC vs KKR: இந்தியாவுக்கு ஆடும் வீரரையே ஓரமா உட்கார வைத்த கேகேஆர்.. டெல்லி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

First Published Oct 3, 2020, 7:51 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.
 

ஐபிஎல் 13வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
undefined
அடுத்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கேகேஆரும் ஆடுகின்றன. சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி கேபிடள்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
undefined
இந்த போட்டியில் கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் பிரதான ஸ்பின்னரான குல்தீப் யாதவ் கேகேஆர் அணியில் ஆடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டுள்ளார். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகிய 2 ஸ்பின்னர்கள் போதும் என்று கருதி, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை எடுக்கும் எண்ணத்தில் ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
கேகேஆர் அணி:ஷுப்மன் கில், சுனில் நரைன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், ராகுல் திரிபாதி, பாட் கம்மின்ஸ், நாகர்கோட்டி, ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி:பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா, ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்ட்ஜே.
undefined
click me!