RCB vs CSK: சிஎஸ்கே அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஆர்சிபி முதலில் பேட்டிங்

First Published | Oct 25, 2020, 3:17 PM IST

சிஎஸ்கே அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடக்கிறது. ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.
மேலும் சிஎஸ்கே அணி ஒரு அணியாகவே இல்லை. மிகவும் பலவீனமான சிஎஸ்கே அணி, ஆர்சிபியை எதிர்கொண்டு இன்றைய போட்டியில் வெற்றியே பெற்றாலும், இது உப்புச்சப்பில்லாத போட்டிதான். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Tap to resize

இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லாத சிஎஸ்கே அணியில், 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு பதிலாக மிட்செல் சாண்ட்னெரும், ஷர்துல் தாகூருக்கு பதிலாக மோனு குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிஎஸ்கே அணி:டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ராயுடு, ஜெகதீசன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மோனு குமார்.
ஆர்சிபி அணியில் இசுரு உடானா நீக்கப்பட்டு, மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி அணி:தேவ்தத் படிக்கல், ஃபின்ச், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், மொயின் அலி, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், சாஹல்.

Latest Videos

click me!