ஐபிஎல் 2020: என்னது இன்னக்கி மேட்ச்லயும் அவரு ஆடலையா..? பின்ன அவருக்கு எதுக்கு அத்தனை கோடி

First Published Oct 3, 2020, 1:17 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸை இன்று எதிர்கொள்ளும் ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி, நல்லவிதமாக தொடங்கியுள்ளது.
undefined
இதுவரை ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
undefined
இன்று ஆர்சிபி ஆடவுள்ள அதன் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. ஆர்சிபி வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் நல்ல பேலன்ஸான அணியாக செட்டில் ஆகிவிட்டது.
undefined
எனவே இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
undefined
ஆர்சிபி அணி இந்த சீசனில் ரூ.10 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்த தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் ஆடவில்லை. அவர் இல்லாமலேயே பேலன்ஸான அணி காம்பினேஷன் ஆர்சிபியில் உள்ளது. காயத்திலிருந்து மீண்டுவரும் மோரிஸ், வலையில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும் அவர் இன்றைய போட்டியில் ஆடமாட்டார்.
undefined
ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, ஆடம் ஸாம்பா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.
undefined
click me!