KKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே..! ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்

First Published Oct 21, 2020, 3:49 PM IST

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4ம் இடங்களில் இருக்கும் அணிகளான ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன.
undefined
ஆர்சிபி அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் உள்ள நிலையில், கேகேஆர் அணி 9 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் உள்ளது.
undefined
பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் ஒருசில வெற்றிகளை மட்டுமே இந்த 2 அணிகளும் எதிர்நோக்கியிருந்தாலும் கூட, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர் வெற்றிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்து வருவதால், ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளுக்குமே இன்றைய போட்டி மிக முக்கியமானது.
undefined
இந்த போட்டிக்கான ஆர்சிபி அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் ஆர்சிபி களமிறங்கும்.
undefined
அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச்சின் ஃபார்ம் தான் ஆர்சிபிக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. அவர் இந்த சீசனில் இதுவரை பெரிதாக எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை. இதுவரை ஆடிய 9 போட்டிகளில் வெறும் 205 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் ஃபின்ச்.
undefined
ஃபின்ச் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக ஆடாவிட்டாலும், இளம் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல்லுக்கு ஆதரவாகவும், ஆர்சிபி அணியின் லீடர்ஷிப் குழுவில் ஒருவராகவும் இருப்பதால், அவர் ஆர்சிபி அணியின் முக்கியமான வீரராக உள்ளார். கோலி, டிவில்லியர்ஸ், படிக்கல் ஆகியோர் சிறப்பாக ஆடிவரும் நிலையில், ஃபின்ச்சும் ஃபார்மிற்கு வந்து அடித்து ஆடினால் ஆர்சிபி அணியின் ஆட்டமும் ஸ்கோரும் வேற லெவலில் இருக்கும்.
undefined
ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ், ஷாபாஸ் அகமது, இசுரு உடானா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.
undefined
click me!