எல்லாமே தப்பா இருக்குங்க.. இந்த மாதிரி பிரச்னை வரும்னு முன்னாடியே தெரியும் மறைக்காமல் உண்மை சொன்ன பிளெம்மிங்.

First Published Oct 21, 2020, 11:26 AM IST

2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. லீக் சுற்றுக்கான புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் உள்ளது.
 

சிஎஸ்கே அணியால் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக பேசி அதிர வைத்துள்ளார்
undefined
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடருக்கு தயாரான போதே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தொடரில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்தனர். முக்கிய வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணியால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி அப்போது எழுந்தது. எனினும், கேப்டன் தோனி இருப்பதால் சிஎஸ்கே வெற்றி நடை போடும் என அனைவரும் நம்பினர்.
undefined
ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 10 லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று, ஏழு தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பும் சந்தேகமாக மாறி உள்ளது
undefined
பலரும் பல்வேறு காரணங்களை பற்றி பேசி வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் அடிப்படை பிரச்சனைதான் இதற்கு காரணம் என உண்மையை போட்டு உடைத்துள்ளார் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங். வயதான அணி தான் காரணம் என கூறி உள்ளார்
undefined
எப்படியும் வயதான இந்த அணியை வைத்துக் கொண்டு மூன்றாம் ஆண்டு கஷ்டப்படுவோம் என தெரியும். மேலும், துபாய் எங்கள் அணியிடம் இருந்து பல புதிய விஷயங்களை கேட்கிறது என தோல்விக்கான காரணம் வயதான அணி தான் என போட்டு உடைத்துள்ளார்.
undefined
click me!