என்னையவே பெஞ்சுல தான் உட்கார வெச்சீங்க.. நீங்க வீரர்களை நடத்துற லட்சணம் தெரியாதா CSK தோல் உரிக்கும் பதான்..!

First Published Oct 21, 2020, 10:31 AM IST

சிஎஸ்கே அணிக்குள் என்ன நடக்கிறது, அணிக்குள் வீரர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் பேட்டி அளித்துள்ளார். சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் மிக மோசமான சரிவை சந்தித்து உள்ளது. எல்லா வருடமும் சிறப்பாக ஆடி பிளே ஆப் செல்லும் சிஎஸ்கே இந்த வருடம் பிளே ஆப் செல்வது சந்தேகம் ஆகியுள்ளது. இனி வரும் போட்டிகளில் அனைத்திலும் வென்றாலும் சிஎஸ்கே பிளே ஆப் செல்வது சந்தேகம்தான். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து இர்பான் பதான் பேட்டி அளித்துள்ளார்
 

பதான் தனது பேச்சில், ஐபிஎல் தொடரில் 8வது இடத்தில் இருந்து ஏதாவது ஒரு அணி மீண்டு வர முடியும் என்றால் அது கண்டிப்பாக சிஎஸ்கேவாக மட்டுமே இருக்கும். சிஎஸ்கே அணியால் மட்டுமே மாயங்களை நிகழ்த்த முடியும். தனது அணியில் இருக்கும் வீரர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது சிஎஸ்கேவிற்கு மட்டுமே தெரியும்
undefined
வீரர்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளும் அணிதான் சிஎஸ்கே.நான் சிஎஸ்கே அணியில் இருந்திருக்கிறேன். அணிக்குள் என்ன நடக்கிறது, என்ன நடந்தது என்று எனக்கு மட்டுமே தெரியும். தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை சிஎஸ்கே போல யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் வீரர்களை பெரிய அளவில் கவனமாக அணுகுவார்கள்.
undefined
இன்னும் 21-22 வருடங்கள் அந்த அணி நிலையாக இருக்கும். அதுதான் சிஎஸ்கேவின் பலம். நீங்கள் போய் தைரியமாக ஆடுங்கள் என்று வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அணிதான் சிஎஸ்கே. நான் சிஎஸ்கேவில் இருந்திருக்கிறேன். மற்ற அணிகளில் தூங்குவதற்கு கூட நேரம் இருக்காது. மற்ற அணிகளில் தவறாக திட்டங்களை வகுப்பார்கள்.
undefined
ஆனால் சிஎஸ்கேவில் வீரர்களின் நலன் கருதி அதற்கு ஏற்றபடி மட்டுமே திட்டங்களை வகுப்பார்கள். சிஎஸ்கேவை பற்றி குறைவாக மதிப்பிட கூடாது. சின்ன சின்ன விஷயங்களை கூட அவர்கள் சரியாக கவனித்துக் கொள்வார்கள். இந்த வருடம் சிஎஸ்கேவில் சின்ன சறுக்கல் வந்துவிட்டது. ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா என்று முக்கியமான வீரர்கள் ஆட முடியாமல் போய்விட்டது.
undefined
சில வீரர்கள் காயம் காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிஎஸ்கே அணியில் நல்ல கேப்டன் இருக்கிறார் . தோனி ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான கேப்டன். இது போன்ற சூழ்நிலையில் கூட சிஎஸ்கேவை வெற்றியை நோக்கி தோனி கொண்டு செல்ல முடியும். தோனி நினைத்தால் கண்டிப்பாக முடியும் என்று இர்பான் பதான் குறிப்பிட்டுள்ளார்.
undefined
click me!