ஐபிஎல் 2020: ரசிகர்களை மட்டுமல்லாது கிரிக்கெட் ஜாம்பவான்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆர்சிபி..!

First Published Oct 3, 2020, 3:57 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி, ரசிகர்களை மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களையே கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி இந்த சீசனை நல்லவிதமாக தொடங்கியுள்ளது.
undefined
இந்த சீசன் தொடங்கும் முன்பே ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, இந்த சீசனில் ஆர்சிபி அணியின் காம்பினேஷன் சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே நம்பிக்கையுடன் களமிறங்கிய ஆர்சிபி, சன்ரைசர்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
undefined
அதற்கடுத்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி, அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
undefined
பொதுவாக ஆர்சிபி அணி, ஆடும் லெவன் காம்பினேஷனை தொடர்ச்சியாக போட்டிக்கு போட்டி மாற்றிக்கொண்டே இருப்பதுதான், கடந்த சில சீசன்களாக அந்த அணியின் பெரிய பிரச்னையாக இருந்துவந்துள்ளது. அதனால் தான் அந்த அணியால் ஐபிஎல்லில் கோலோச்ச முடியவில்லை என்பதும் உண்மை.
undefined
ஆனால் இந்த சீசனில் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், இசுரு உடானா ஆகிய வீரர்கள் இருப்பதால் ஆர்சிபி அணி நல்ல பேலன்ஸான அணியாக உள்ளது. ஸ்டெய்ன் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, உடானா, குர்கீரத் சிங் மன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
undefined
இந்த அணி காம்பினேஷன் செட் ஆகிவிட்டதாலும், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதாலும், வின்னிங் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆர்சிபி அணி, அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் ராஜஸ்தானுக்கு எதிராக ஆடுகிறது.
undefined
ஆர்சிபி அணி ஆடும் லெவனை மாற்றாதது பெரிய ஆச்சரியம் தான். ஆனால் இதே நிலையை தொடர வேண்டும். ஒரு போட்டியில் தோற்றால், உடனே வீரர்களை தூக்கிப்போடக்கூடாது.
undefined
ஆர்சிபி அணி: ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, குர்கீரத் சிங் மன், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, ஆடம் ஸாம்பா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.
undefined
click me!