உன்னையலாம் சீனியர்னு டீம்ல எடுத்தால், ஜெயிக்க வைக்காம தோற்கடிக்குற..! சீனியர் வீரரை தூக்கிப்போட்ட ராஜஸ்தான்

First Published Oct 3, 2020, 2:47 PM IST

ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்க வாய்ப்புள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன.
undefined
இரு அணிகளுமே இந்த சீசனில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 3வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் சிறப்பாகவுள்ளது. ஆனால் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. ஸ்மித், பட்லர், சாம்சன் ஆகிய அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மூவரும் டாப் 3 பேட்டிங் ஆர்டரில் ஆடுகின்றனர். அவர்கள் மூவரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லையென்றால் அந்த அணியின் நிலை பரிதாபமாகிவிடும். அதுதான் கேகேஆருக்கு எதிரான போட்டியில் நடந்தது.
undefined
அந்த அணியின் மிடில் ஆர்டரில் சீனியர் வீரரான ராபின் உத்தப்பா இருந்தும், அவர் 3 போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. படுமோசமாக சொதப்பினார். அவருக்கு சரியாக ஷாட்டுகள் கனெட்க் ஆவதில்லை. அதனால் பெரிய ஷாட்டுகள் ஆடமுடியாமல் திணறுவதுடன், ஃபீல்டிங்கிலும் சொதப்புகிறார். கேகேஆருக்கு எதிரான போட்டியில் எளிதான கேட்ச்சையும் கோட்டைவிட்டார்.
undefined
எனவே மிடில் ஆர்டர் பலவீனத்தை சரிகட்டும் விதமாக, முதல் 3 போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கிய ஸ்மித், ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கிக்கொண்டு, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பட்லருடன் தொடக்க வீரராக இறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ராபின் உத்தப்பா நீக்கப்பட்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரன், ஷ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், ஜெய்தேவ் உனாத்கத்.
undefined
click me!