RCB vs KXIP: ஆர்சிபியை அல்லு தெறிக்கவிடும் பஞ்சாப் அணியின் அதிரடி முடிவு..! மாபெரும் பவர் ஹிட்டர் கம்பேக்

First Published Oct 15, 2020, 2:22 PM IST

ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய 3 அணிகளில் ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் நன்றாக ஆடிவருகின்றன. ஆனால் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட தவறவிட்டுவிட்டது.
undefined
இதுவரை இந்த சீசனில் ஆடிய 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி. வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் கடைசி ஒருசில ஓவர்களில் செய்யும் தவறுகளால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு தோல்விகளை அடைந்தது பஞ்சாப் அணி.
undefined
பஞ்சாப் அணி அடைந்த ஒரே வெற்றி ஆர்சிபி அணிக்கு எதிராகத்தான். ஆர்சிபிக்கு எதிராக 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது பஞ்சாப் அணி. அபார வெற்றியை பதிவு செய்த ஆர்சிபிக்கு எதிராகத்தான் இன்றைய போட்டியில் ஆடுகிறது பஞ்சாப் அணி.
undefined
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் மயன்க் அகர்வாலும் சிறப்பாக ஆடிவருகின்றனர். ஆனால் அந்த அணியின் வெளிநாட்டு வீரர்களில் நிகோலஸ் பூரானை தவிர வேறு யாருமே பங்களிப்பு செய்வதில்லை. மேக்ஸ்வெல், ஜிம்மி நீஷம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டான் கோட்ரெல், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தொடர்ச்சியாக சொதப்புகின்றனர்.
undefined
இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட, ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரரும் அதிரடி மன்னருமான யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் ஆடவில்லை. தொடக்க வீரர்களாக ராகுலும் மயன்க் அகர்வாலும் செட் ஆகிவிட்டதாலும், கெய்லுக்கு வயதாகிவிட்டதால், அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இப்போதிருக்கும் நிலையில், மற்ற வெளிநாட்டு வீரர்கள் சொதப்புவதால் கெய்லுக்கு இன்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
அதுமட்டுமல்லாது, இன்றைய போட்டி நடக்கும் ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால், கெய்ல் சிக்ஸர்களை பறக்கவிட ஏற்ற மைதானம் என்பதாலும், அவருக்கு இன்றைய போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடிய ஸ்பின்னர் முஜிபுர் ரஹ்மான் நீக்கப்பட்டு கெய்ல் சேர்க்கப்படலாம். ஸ்பின்னர் முஜிபுர் நீக்கப்பட்டதால், முருகன் அஷ்வின் சேர்க்கப்படலாம். முருகன் அஷ்வின் சேர்க்கப்படுவதால், பிரப்சிம்ரன் சிங் நீக்கப்படுவார்.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்:கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், மந்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
undefined
ஆர்சிபி அணிக்கு வலுவான காம்பினேஷன் செட் ஆகிவிட்டதால், அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
undefined
click me!