RR vs KXIP: டாஸ் வென்ற ஸ்மித் பவுலிங் தேர்வு..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

First Published | Sep 27, 2020, 7:22 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித், பஞ்சாப்பை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
ஷார்ஜா மைதானம் மிகச்சிறியது என்பதால் கண்டிப்பாக பெரிய ஸ்கோர் மேட்ச்சாகத்தான் அமையும். இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்கள் இருப்பதால் ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழியப்போவது உறுதி.
Tap to resize

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், ஜிம்மி நீஷம், முருகன் அஷ்வின், ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜோஸ் பட்லர் அணியில் இணைந்ததால், டேவிட் மில்லர் நீக்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் ஐபிஎல்லில் அறிமுகமான இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் ராஜ்பூத் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ராகுல் டெவாட்டியா, டாம் கரன், ரியான் பராக், ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனாத்கத், அங்கித் ராஜ்பூத்.

Latest Videos

click me!