ஐபிஎல் 2020: RR vs KKR: ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பவுலிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் இதற்கு முன் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அந்த வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இறங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவிய கேகேஆர் அணி, அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற கேகேஆர் அணி, அதே வெற்றியை தொடரும் முனைப்பில் தான் இறங்கியுள்ளது.
இரு அணிகளுமே வெற்றியை தொடரும் முனைப்பில், சமபலத்துடன் களமிறங்கியுள்ளதால் போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். டாஸ் வென்ற ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளுமே ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற்றதால், வின்னிங் காம்பினேஷனை சிதைக்காமல், அதே காம்பினேஷனுடன் களமிறங்கியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரன், ஷ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், ஜெய்தேவ் உனாத்கத்.
கேகேஆர் அணி:ஷுப்மன் கில், சுனில் நரைன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, நாகர்கோடி.

Latest Videos

click me!