ஐபிஎல் 2020: செம பவுலிங்டா தம்பி.. சன்ரைசர்ஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழ்நாட்டு பவுலரை பாராட்டிய பிரெட் லீ

First Published Sep 30, 2020, 7:10 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில், டெத் ஓவரில் சிறப்பாக பந்துவீசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜனை வெகுவாக பாராட்டியுள்ளார் முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் பிரெட் லீ.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அபுதாபியில் நேற்று, டெல்லி கேபிடள்ஸுக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் இடையே நடந்த போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.
undefined
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி, வார்னர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் ஆகிய 3 அனுபவ வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால் 20 ஒவரில் 162 ரன்கள் அடித்து, 163 ரன்களை டெல்லி கேபிடள்ஸுக்கு இலக்காக நிர்ணயித்தது.
undefined
163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி 147 ரன்களுக்கு சுருண்டு 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
undefined
இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. புவனேஷ்வர் குமார், நடராஜன், ரஷீத் கான், அபிஷேக் சர்மா ஆகிய அனைவருமே சிறப்பாக பந்துவீசினர். சன்ரைசர்ஸ் பவுலர்களின் சிறப்பான பவுலிங்கால் தான் அந்த அணி வென்றது. ரஷீத் கான் தான் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
undefined
இந்த போட்டியில், சன்ரைசர்ஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் தமிழத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜன். யார்க்கர், ஸ்லோ டெலிவரி என வெரைட்டியை கொண்டுள்ள நடராஜன், டெத் ஓவர்களில் யார்க்கர்களை துல்லியமாக வீசுவதுடன், சாமர்த்தியமாக பந்துகளை மாற்றி மாற்றி வீசுகிறார்.
undefined
டெல்லிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை அருமையாக வீசி வெறும் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அபாயகரமான வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸின் விக்கெட்டையும் வீழ்த்தினார் நடராஜன்.
undefined
நடராஜனின் பவுலிங்கால் ஈர்க்கப்பட்ட, ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும் ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவருமான பிரெட் லீ, நடராஜனை, டெத் ஓவரை இப்படித்தான் வீச வேண்டும். அருமையான பவுலிங் நடராஜன் என்று பிரெட் லீ பாராட்டியுள்ளார். சேவாக்கும் நடராஜனின் பவுலிங்கை வெகுவாக பாராட்டினார்.
undefined
click me!