RR vs RCB: இனிமேலும் அவரை அணியில் வைத்திருப்பதில் அர்த்தமே இல்ல ராஜஸ்தான் ராயல்ஸ்

First Published Oct 17, 2020, 1:09 PM IST

ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும், கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன.
undefined
எஞ்சிய 2 இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட மற்ற அனைத்து அணிகளுக்குமே உள்ளது. இந்நிலையில், இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று, சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸுக்கு நிகரான நிலையில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று ஆர்சிபியை எதிர்கொள்கிறது.
undefined
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் கம்பேக்கிற்கு பிறகு அணி காம்பினேஷன் வலுப்பெற்றாலும் கூட, முதல் பந்திலிருந்தே அடித்து ஆடவல்ல பென் ஸ்டோக்ஸ், அந்த அணியின் ஃபினிஷர் ரோலுக்கு ஏற்றவர். ஆனால் பட்லர், ஸ்மித், சாம்சன் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏராளமாக இருக்கின்ற நிலையில், அவர்களை விடுத்து, பட்லருடன் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக இறக்கப்படுகிறார்.
undefined
தொடர்ச்சியாக சொதப்பிவரும் ராபின் உத்தப்பாவை அணியிலிருந்து நீக்கிவிட்டு, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பட்லருடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டு, பென் ஸ்டோக்ஸை மிடில் ஆர்டரில் ஆடவைத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டர் வலுப்பெறும். ராகுல் டெவாட்டியா மற்றும் ஸ்டோக்ஸ் இணைந்து போட்டிகளை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியும்.
undefined
அதைவிடுத்து ஏற்கனவே வலுவாக இருக்கும் டாப் ஆர்டருக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ஸ்டோக்ஸை தொடக்க வீரராக இறக்குவது சரியான உத்தி அல்ல. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. திறமையானன் பேட்ஸ்மேனான அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இனிமேலும் ராபின் உத்தப்பாவை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்து அவரை நீக்கிவிட்டு ஜெய்ஸ்வாலையோ அல்லது லோம்ராரையோ சேர்க்கலாம்.
undefined
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக வெற்றியை பெற்றுக்கொடுக்க கிடைத்த அருமையான வாய்ப்பை தவறவிட்டார் உத்தப்பா. எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியை கூட வெற்றிகரமாக முடித்துவைக்க முடியாத உத்தப்பாவை இனிமேலும் நம்பி எந்த பயனும் இல்லை.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால்லோம்ரார், பென் ஸ்டோக்ஸ், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனாத்கத்.
undefined
click me!