டி காக் அதிரடி அரைசதம்.. கடைசி ஓவரில் காட்டடி அடித்த க்ருணல் பாண்டியா..! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கு

First Published Oct 4, 2020, 5:52 PM IST

சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில், 208 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, முதல் ஓவரில் 4வது பந்தில் சிக்ஸர் அடித்து, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நல்ல ஷாட்டுகளுடன் நல்லவிதமாக தொடங்கிய சூர்யகுமார் யாதவுக்கு இம்முறையும் பெரிய இன்னிங்ஸ் ஆடும் கொடுப்பனை கிடைக்கவில்லை. சூர்யகுமார் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.
undefined
அதன்பின்னர் 2 இடது கை பேட்ஸ்மேன்களான டி காக்கும் இஷான் கிஷனும் இணைந்து அருமையாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 8 என்கிற அளவில் இருந்த ரன்ரேட்டை 12வது ஓவர்வாக்கில் 10 என்கிற அளவிற்கு உயர்த்தினர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டி காக் 39 பந்தில் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் இஷான் கிஷனும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
undefined
ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால், அங்கு ஆடும் ஆட்டங்களில் 220க்கும் அதிகமான ரன்கள் அசால்ட்டாக அடிக்கப்படுகின்றன. அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள் அதிகமாக இருப்பதால் சிக்ஸர் மழை உறுதி.
undefined
209 ரன்கள் என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி ஆடிவருகிறது.
undefined
click me!