CSK vs KXIP: எதையுமே உருப்படியா செய்யாத நீ டீம்ல தேவையே இல்ல..! தூக்கி எறியப்பட்ட வெளிநாட்டு வீரர்

First Published Oct 4, 2020, 5:09 PM IST

சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில், புதிய கேப்டன்(ராகுல்), புதிய பயிற்சியாளர்(அனில் கும்ப்ளே) என புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடி ஏராளமான ரன்களை குவித்தும்கூட, அந்த அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் தான்.
undefined
இந்நிலையில், இன்று சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி. இரு அணிகளுமே இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் 2வது வெற்றியை பெற்று இந்த சீசனி கம்பேக் கொடுக்கும் முனைப்பில் இருக்கின்றன.
undefined
இந்த போட்டியில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணப்பா கௌதம் நீக்கப்பட்டு, ரிஸ்ட் ஸ்பின்னர் முருகன் அஷ்வின் சேர்க்கப்படுவார். முருகன் அஷ்வின் இந்த சீசனில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் அருமையாக வீசியிருக்கிறார்.
undefined
மற்றொரு மாற்றம் ஜிம்மி நீஷம். நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷமின் மீது பெரும் நம்பிக்கை வைத்து பஞ்சாப் அணி, அவரது அடிப்படை விலைக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் இந்த சீசனில், பஞ்சாப் ஆடிய முதல் 4 போட்டிகளில் 3ல் ஆட வாய்ப்பு பெற்ற நீஷம், பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பினார்.
undefined
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காததால், 2 ஓவர்கள் மட்டும் பந்துவீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
undefined
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த போட்டியில் 4 ஓவர்கள் முழுமையாக வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அது மெகா ஸ்கோர்(223) ஆட்டம் என்பதால் 40 ரன்களை விட்டுக்கொடுத்தது என்பது நல்ல பவுலிங் தான். ஆனால் மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆடி 7 பந்தில் வெறும் 7 ரன் மட்டுமே அடித்ததுடன், 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை வாரிவழங்கியதுடன், விக்கெட்டும் வீழ்த்தவில்லை.
undefined
இதையடுத்து பஞ்சாப் அணியில் நீஷம் ஏன் எடுக்கப்படுகிறார் என்ற கேள்வியும் சர்ச்சையும் எழுந்தது. நீஷமின் மோசமான ஆட்டத்தின் விளைவால், அவர் பஞ்சாப் அணிக்கு ஏன் என ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்ய, அதற்கு நீஷம் பதிலடி கொடுக்க, நீஷமின் பதிலடிக்கு ஆகாஷ் சோப்ரா பதில் சொல்ல, என வாக்குவாதமே நடந்தது.
undefined
அந்தளவிற்கு நீஷமின் இருப்பு கேள்வியை எழுப்பிய நிலையில், சிஎஸ்கேவிற்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்:கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கருண் நாயர், நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், சர்ஃபராஸ் கான், முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், ஷெல்டான் கோட்ரெல், முகமது ஷமி.
undefined
click me!