MI vs KXIP: எதிர்காலத்தை மனதில் வைத்து மும்பை இந்தியன்ஸின் அதிரடி முடிவு..! எதிரணிகளே உஷார்

First Published Oct 18, 2020, 6:48 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 4 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனிலும் அருமையாக ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
undefined
பேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என அனைத்திலுமே அசத்தி வெற்றிகளை குவித்துவருகிறது. எந்தவொரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்திருக்காததே மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரும் பலம்.
undefined
ரோஹித் சர்மா, டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, பும்ரா, போல்ட் என ஒவ்வொருவரும் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கின்றனர்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு செல்வது உறுதியாகிவிட்டதால், அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த போட்டியில் ஜேம்ஸ் பாட்டின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, குல்ட்டர்நைல் ஆடவைக்கப்பட்டார். இன்றைய போட்டியிலும் குல்ட்டர்நைலே ஆடுவார்.
undefined
அதேபோல பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் டிரெண்ட் போல்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மெக்லனெகன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
அதுமட்டுமல்லாது இதுவரை பேட்டிங் ஆட பெரிதாக வாய்ப்பு கிடைக்காத க்ருணல் பாண்டியா, அவரது வழக்கமான பேட்டிங் ஆர்டரை விட முன்கூட்டியே இறக்கப்படுவார் என தெரிகிறது. ஏனெனில் அவரும் பேட்டிங் ஃபார்முக்கு வருவது முக்கியம். அவருக்கு கிடைத்த மிகச்சில வாய்ப்புகளில், ஒரு இன்னிங்ஸில் கடைசி 4 பந்தில் 20 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், மெக்லனெகன், பும்ரா.
undefined
click me!