SRH vs KKR: இதுவரை பட்டது பத்தாதா..? இனிமேலும் அவரை நம்பி நோ யூஸ்..!

First Published Oct 18, 2020, 2:34 PM IST

கேகேஆருக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்து லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பிற்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது.
undefined
எஞ்சிய ஒரு இடத்திற்கு கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும். ஏனெனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இனிமேல் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளன.
undefined
கேகேஆர் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் நான்கிலும், சன்ரைசர்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த இரு அணிகளும் இன்று மோதுகின்றன.
undefined
இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங், அதிகமாக டாப் ஆர்டரையே சார்ந்திருக்கும் நிலையில், மிடில் ஆர்டரில் கிடைத்த வாய்ப்புகளில் அபிஷேக் ஷர்மா ஓரளவிற்கு நன்றாகவே ஆடியிருந்தாலும், அவர் நீக்கப்பட்டு இன்றைய போட்டியில் விராட் சிங் ஆடுவதற்கான வாய்ப்புள்ளது.
undefined
மேலும் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் ஆர்டரில் ஒரு மாற்றத்தை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 3ம் வரிசையில் இறங்கிவரும் மனீஷ் பாண்டே, பெரியளவில் அடித்தும் ஆடுவதில்லை; நிறைய பந்துகளை ஆடி களத்தில் நிலைத்தாலும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றி அணிக்கு பலனளிக்கும் விதத்திலும் ஆடுவதில்லை.
undefined
அதேவேளையில் கேன் வில்லியம்சன் நல்ல ஃபார்மில் எந்த சூழலிலும் அருமையாக ஆடிக்கொண்டிருக்கிறார். எனவே அவரை 3ம் வரிசையில் இறக்கினால், கடைசி வரை நின்று ஆடி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, அணிக்கு பலனளிக்கக்கூடிய இன்னிங்ஸை ஆடுவார். எனவே வில்லியம்சனை 3ம் வரிசையில் இறக்குவது சன்ரைசர்ஸ் அணிக்கு நல்லது.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்:டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், விராட் சிங், ரஷீத் கான், ரியான் பராக்ஷாபாஸ் நதீம், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.
undefined
click me!