ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி மாற்றம்..! முதல் முறையாக களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர்

First Published Oct 1, 2020, 5:00 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.
undefined
இரு அணிகளுமே இந்த சீசனில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளதால், இரு அணிகளுமே 2வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. இரு அணிகளிலும் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருப்பதால் போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரும்பாலும் தேவையில்லாமல் மாற்றங்கள் செய்யப்படமாட்டாது. கடந்த 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. சவுரப் திவாரி காயம் காரணமாக இஷான் கிஷான் இறக்கப்பட்டார். ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டதால், அவர் இனிமேல் கண்டிப்பாக அணியில் இருப்பார்.
undefined
இன்றைய போட்டிக்கான அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஜேம்ஸ் பாட்டின்சன் நீக்கப்பட்டு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் நேதன் குல்ட்டர்நைல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
undefined
குல்ட்டர்நைல் ஃபாஸ்ட் பவுலிங் வீசுவது மட்டுமல்லாது, பேட்டிங்கும் ஆடக்கூடிய வீரர். குல்ட்டர்நைல் இதுவரை மும்பை அணி ஆடிய 3 போட்டிகளிலும் அவர் ஆடவில்லை. எனவே இந்த போட்டியில் அந்த ஒரு மாற்றம் மட்டும் எதிர்பார்க்கலாம்.
undefined
மும்பை இந்தியன்ஸின் உத்தேச ஆடும் லெவன்:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, நேதன் குல்ட்டர்நைல், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.
undefined
click me!