ஐபிஎல் 2020: என்னது இன்னக்கி மேட்ச்லயும் அவரு ஆடலையா..? ரசிகர்கள் பெரும் சோகம்

First Published Oct 1, 2020, 3:39 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸூம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.
undefined
இரு அணிகளுமே இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், 2வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் 223 ரன்களை அடித்தும் தோற்றது. கடந்த போட்டியில் தோற்றிருந்தாலும், அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
undefined
எனவே கிறிஸ் கெய்லுக்கு இந்த போட்டியிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது. ஏனெனில் தொடக்க ஜோடியாக கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் சிறப்பாக ஆடி நன்றாக செட்டில் ஆகிவிட்டனர். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதுடன், இருவரும் அருமையாக ஆடிவருவதால் கெய்லுக்கு இந்த போட்டியிலும் ஆட வாய்ப்பு கிடைக்காது.
undefined
ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர் கெய்ல். கடந்த 2 சீசன்களாக அவர் தான் பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக இறங்கிவந்தார். ஐபிஎல்லில் 175 என்ற அதிகபட்ச ஸ்கோருடன், 4484 ரன்களை குவித்து, 326 சிக்ஸர்களுடன் ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்களை விளாசிய மாபெரும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் என்றாலும், அவருக்கு 41 வயது ஆகிவிட்டது. அவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தமாட்டார். ஃபீல்டிங்கும் சரியாக செய்யமாட்டார். மேலும் பஞ்சாப் அணியில் பூரான், மேக்ஸ்வெல், நீஷம், ஷெல்டான் கோட்ரெல் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் அணியின் செட்டில் ஆகிவிட்டதால், கெய்லுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்:கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கருண் நாயர், நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், சர்ஃபராஸ் கான், முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், ஷெல்டான் கோட்ரெல், முகமது ஷமி.
undefined
click me!