நீங்கலாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்லடா.. 15வது ஓவருலயே சோலியை முடித்து DCயை பார்சல் பண்ண MI..! இஷான் கிஷன் அபாரம்

First Published | Oct 31, 2020, 6:52 PM IST

டெல்லி கேபிடள்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொல்லார்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியில் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தனர். பவர்ப்ளேயில் டிரெண்ட் போல்ட் விக்கெட்டுகளை வீழ்த்த, அதன்பின்னர் பும்ரா தனது வேலையை காட்ட ஆரம்பித்தார்.
Tap to resize

தவான்(0), பிரித்வி ஷா(10) ஆகிய இருவரையும் போல்ட் வீழ்த்தினார். ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து படுமந்தமாக பேட்டிங் ஆடிய 3வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுக்கு ராகுல் சாஹரின் பந்தில் ஆட்டமிழக்க, ஸ்டோய்னிஸ்(2), ரிஷப் பண்ட்(21) ஆகிய இருவரையும் தனது ஒரே ஓவரில் வீழ்த்திய பும்ரா, ஷர்ஷல் படேலையும் 5 ரன்களையும் வீழ்த்தினார். அஷ்வினை 12 ரன்களுக்கு போல்ட் வீழ்த்த, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு டெல்லி கேபிடள்ஸ் அணி வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்தது.
111 ரன்கள் என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் மிகவும் ரிலாக்ஸாக தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 68 ரன்களை சேர்த்தனர். டி காக் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன், 47 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 72 ரன்களை விளாசி கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். இஷான் கிஷனின் அதிரடியால் பதினைந்தாவது ஓவரிலேயே இலக்கை எட்டி மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Latest Videos

click me!