KXIP vs MI: பஞ்சாப் அணியில் ஒரேயொரு அதிரடி மாற்றம்..! மும்பை இந்தியன்ஸ் முதல் பேட்டிங்

First Published Oct 1, 2020, 7:23 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல், பவுலிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ராகுல், பவுலிங்கை தேர்வு செய்து, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
undefined
இரு அணிகளுமே இதற்கு முன் தலா 3 போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால், 2வது வெற்றியை பெறும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்கியுள்ளன.
undefined
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆர்சிபிக்கு எதிரான முந்தைய போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளது.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி:ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா.
undefined
பஞ்சாப் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் முருகன் அஷ்வின் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் சேர்க்கப்பட்டுள்ளார்.முருகன் அஷ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் சிறப்பாகவே பந்துவீசினார். ஆனால் மும்பை இந்தியன்ஸில் டி காக், இஷான் கிஷான், க்ருணல் பாண்டியா ஆகிய இடது கை வீரர்கள் இருப்பதாலும், ரவி பிஷ்னோயும் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னரான அஷ்வினை எடுப்பதை விட ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதமை எடுப்பது சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை எடுத்துள்ளனர்.
undefined
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கருண் நாயர், நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், ஜிம்மி நீஷம், சர்ஃபராஸ் கான், கிருஷ்ணப்பா கௌதம், ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.
undefined
click me!