ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆடும் அணிகள்.
துபாயில் நடக்கும் இந்த போட்டியில், ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் பஞ்சாப் அணி களமிறங்குகிறது. அதேவேளையில், ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் வென்ற உற்சாத்துடனும் நம்பிக்கையுடனும் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.
கோலி, ஃபின்ச், டிவில்லியர்ஸ், இளம் தேவ்தத் படிக்கல் என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட ஆர்சிபிக்கு நிகரான பேட்டிங் பலத்தை, ராகுல், மயன்க் அகர்வால், பூரான், மேக்ஸ்வெல் என பஞ்சாப் அணியும் பெற்றுள்ளது. பேட்டிங், பவுலிங் என இந்த 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன.
இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் ஆடிய போட்டியில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் தோற்றது. அந்த போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது டெல்லி பேட்டிங்கின் கடைசி ஓவர் தான். டெல்லி கேபிடள்ஸ் பேட்டிங் ஆடிய போது கடைசி ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசினார். 19 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி அணி. ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் வெளுத்து வாங்க, அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களை குவித்து 20 ஓவரில் 157 ரன்களை குவித்தது டெல்லி அணி. அந்த ஒரு ஓவர் தான் ஆட்டத்தின் முடிவையே தீர்மானித்தது.
பவுலிங்கில் சொதப்பிய ஜோர்டான், பேட்டிங்கிலும் சொதப்பினார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதைக்கூட அடிக்கமுடியாமல் அவுட்டாகி சென்றார் ஜோர்டான். அதனால் தான் போட்டி டை ஆகி, சூப்பர் ஓவர் வரை சென்றது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பினார் ஜோர்டான்.எனவே இன்றைய அவருக்கு பதிலாக, கடந்த சீசனில் நல்ல பங்களிப்பை வழங்கிய ஹார்டஸ் விஜோயன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்:கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கருண் நாயர், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், கிருஷ்ணப்பா கௌதம், ஷெல்டான் கோட்ரெல், முஜீபுர் ரஹ்மான்கிறிஸ் ஜோர்டான், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.