ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் கேகேஆரும் சன்ரைசர்ஸும் மோதுகின்றன. இந்த 2 அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், இந்த சீசனில் முதல்முறையாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதற்கு முன் நடந்த 7 போட்டிகளில் டாஸ் வென்ற அனைத்து கேப்டன்களும், முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்தனர். வார்னர் தான் முதல்முறையாக இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
கேகேஆர் அணி:சுனில் நரைன், ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கடந்த போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தால் சீசனிலிருந்தே விலகிய நிலையில், அவரது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் ஸ்பின் ஆல்ரவுண்டர் முகமது நபியும், விஜய் சங்கருக்கு பதிலாக ரிதிமான் சஹாவும், சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடது கை ஃபாஸ்ட் பவுலர் கலீல் அகமதுவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ப்ரியம் கர்க், ரிதிமான் சஹா, முகமது நபி, அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, டி.நடராஜன்.
கேகேஆர் அணியில் 2 மாற்றங்களும், சன்ரைசர்ஸ் அணியில் 3 மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.கேகேஆர் அணியில் நிகில் நாயக் மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, தமிழ்நாட்டு ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி மற்றும் இளம் ஃபாஸ்ட் பவுலர் கமலேஷ் நாகர்கோடி ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.