உன் எண்ணம் ஈடேறாதுப்பா தோனி..! கபில் தேவ் அதிரடி

First Published Nov 3, 2020, 8:34 AM IST

தோனி ஐபிஎல்லில் மட்டும் ஆட வேண்டும் என்று நினைத்தால், அவரால் சரியாக ஆடமுடியாது என்று இந்திய அணியின் முன்னாள் உலக கோப்பை வின்னிங் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கேவிற்கும் கேப்டன் தோனிக்கும் சரியானதாக அமையவில்லை. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சரியாக ஆடாத சிஎஸ்கே அணி, தொடர் தோல்விகளை தழுவி, சீசனின் முடிவில் 12 புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆஃபிற்குக்கூட தகுதிபெறாமல், முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது.
undefined
சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. இந்த சீசனில் வெறும் 116 ஸ்டிரைக்ரேட், 25 என்ற சராசரியுடன் 200 ரன்களை மட்டுமே அடித்தார் தோனி.
undefined
2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணிக்காக ஆடியபின்னர், ஒரு போட்டியில் கூட ஆடிராத தோனி, நேரடியாக ஐபிஎல்லில் களம்கண்டார். இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வையும் அறிவித்தார்.
undefined
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டதால், இனிமேல் ஐபிஎல்லில் மட்டும்தான் ஆடுவார். அடுத்த சீசனிலும் கண்டிப்பாக ஆடுவேன் என்று அதையும் உறுதி செய்துவிட்டார்.
undefined
இந்நிலையில், தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள கபில் தேவ், தோனி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்லில் மட்டும் ஆட திட்டமிட்டிருந்தால், அவரால் ஐபிஎல்லில் கண்டிப்பாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. வயதை பற்றி பேசுவது சரியல்ல. ஆனால் தொடர்ந்து ஆடிக்கொண்டேயிருந்தால் தான், உடம்பு அதற்கு ஒத்துழைக்கும். ஓராண்டில் 10 மாதங்கள் எந்த போட்டியிலும் ஆடாமல், திடீரென ஐபிஎல்லில் மட்டும் ஆடவேண்டுமென்றால், என்ன நடக்கும் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இது கிறிஸ் கெய்ல் உட்பட அனைவருக்குமே நடக்கும். எனவே முதல்தர கிரிக்கெட்டில் தோனி ஆட வேண்டும். அப்போதுதான் அவரால் ஐபிஎல்லில் சோபிக்கமுடியும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
undefined
click me!