வாழ்வா சாவா போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ்..! உத்தேச ஆடும் லெவன்

First Published Nov 3, 2020, 7:12 AM IST

பிளே ஆஃபிற்கு முன்னேற வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசனின் கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் தான், பிளே ஆஃபிற்கு முன்னேறும் கடைசி அணி எது என்பது உறுதியாகும்.
undefined
மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், 14 புள்ளிகளுடன் கேகேஆர் அணி, நெட் ரன்ரேட்டில் பின் தங்கியிருப்பதால், ஆர்சிபிக்கு அடுத்த 4ம் இடத்தில் உள்ளது. 12 புள்ளிகளுடன் நல்ல நெட் ரன்ரேட்டில் இருக்கும்(+0.555) சன்ரைசர்ஸ் அணி, இன்றைய கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் வென்றால், புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும்; தோற்றால், கேகேஆர் தகுதிபெற்றுவிடும்.
undefined
வாழ்வா சாவா போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று ஷார்ஜாவில் எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் அணி. இந்த சீசனில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், தொடக்கத்திலிருந்தே வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்துவரும் சன்ரைசர்ஸ் அணிக்கு, ரிதிமான் சஹாவின் வருகையும், ஜேசன் ஹோல்டரின் வருகையும் நல்ல நெகிழ்வுத்தன்மையையும் நல்ல பேலன்ஸையும் வழங்கியுள்ளது.
undefined
அந்தவகையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடும் லெவன் காம்பினேஷனை மாற்றாமல், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபியை வீழ்த்திய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் இறங்குவது சன்ரைசர்ஸ் அணிக்கு நல்லது. எனவே இன்றைய போட்டியில் அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
undefined
உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:டேவிட் வார்னர்(கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தை உறுதி செய்துவிட்டதால், அந்த அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்காமல், முக்கியமான சில வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இந்த சீசனில் இதுவரை ஆடாத லின், மிட்செல் மெக்லனகன், தவால் குல்கர்னி ஆகிய வீரர்களை களமிறக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மும்பையை அடிக்க முயல வேண்டும் சன்ரைசர்ஸ். அப்படியான மாற்றங்களை மும்பை அணி செய்யும்பட்சத்தில், அது சன்ரைசர்ஸுக்கு அனுகூலமாக அமையலாம்.
undefined
click me!