நான் இன்னைக்கு நல்லா ஆடுறேன்னா அதுக்கு ராகுல் டிராவிட் சார் தான் காரணம் - இஷான் கிஷன்

First Published Nov 2, 2020, 4:03 PM IST

ராகுல் டிராவிட்டால் தான் தனது பேட்டிங் திறன் மேம்பட்டிருப்பதாக இளம் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திவருகிறது. பிளே ஆஃபிற்கு முதல் அணியாக தகுதிபெற்றது மும்பை இந்தியன்ஸ். 4 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அபாரமாக செயல்படுவதுடன், எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்திருக்காததுதான் அந்த அணியின் பலமே.
undefined
சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டி காக், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, போல்ட் என அனைவரும் சிறப்பாக ஆடுகின்றனர். ரோஹித் சர்மா இல்லாமலேயே அந்த அணி அசத்திவருகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, டெல்லி கேபிடள்ஸை அசால்ட்டாக அடித்து நொறுக்கியது மும்பை அணி. அந்தளவிற்கு வலுவான அணியாக உள்ளது.
undefined
இந்த சீசன் முழுவதுமே முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. படிக்கல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் என இளம் வீரர்கள் அசத்திவருகின்றனர்.
undefined
மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். இதற்கு முந்தைய சீசன்களைவிட இந்த சீசன் அவருக்கு சிறந்த சீசனாக அமைந்துள்ளது. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 99 ரன்களை குவித்த இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆடாததால் கடந்த சில போட்டிகளாக டி காக்குடன் தொடக்க வீரராக இறங்கி ஆடிவருகிறார். தொடக்க வீரராக அபாரமாக ஆடிவரும் இஷான் கிஷன், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி 47 பந்தில் 72 ரன்களை குவித்து மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
undefined
முன்பை விட இந்த சீசனில் அவரது பேட்டிங் நன்கு மேம்பட்டுள்ளது. இந்த சீசனில் 11 போட்டிகளில் ஆடி 395 ரன்களை குவித்துள்ளார்.
undefined
இந்நிலையில், தனது பேட்டிங் மேம்பட்டிருப்பது குறித்து பேசிய இஷான் கிஷன், நான் அதிகமாக லெக் திசையில் தான் ஷாட்டுகளை ஆடிக்கொண்டிருந்தேன். எனது பயிற்சியாளர்கள் ஆஃப் திசையில் அடித்து ஆட வேண்டியது அவசியம் என்றனர். ஆனால் ஆரம்பத்தில் நான் ஆஃப் திசையில் ஆடமாட்டேன். அது எனது பலமும் அல்ல. ராகுல் டிராவிட் சார் தான் ஆஃப் திசையில் அடித்து ஆடி பழகுமாறு அறிவுறுத்தினார். அதன்பின்னர் ஆஃப் திசையில் ஆடி பயிற்சி செய்தேன். அதன் தாக்கம் ஆட்டத்தில் தெரிகிறது என்று டிராவிட்டுக்கு நன்றி தெரிவித்தார் இஷான் கிஷன்.
undefined
இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தியா அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து, பிரித்வி ஷா, கில், மயன்க் அகர்வால், இஷான் கிஷன் உள்ளிட்ட பல இளம் திறமைகளை வளர்த்தெடுத்து, மெருகேற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!