#DCvsRCB ஜெயிச்சே தீரணும்.. ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. டெல்லி கேபிடள்ஸில் ஒரு மாற்றம்

First Published Nov 2, 2020, 3:10 PM IST

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்றில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இதுவரை பிளே ஆஃபிற்கு முன்னேறும் 3 அணிகள் உறுதியாகவில்லை. அந்தளவிற்கு சிறந்த மற்றும் சுவாரஸ்யமான சீசனாக இது அமைந்துள்ளது.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் தலா 14 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு கூட உள்ளது.
undefined
ஏனெனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் டாப் 4 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமானது.
undefined
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி 2 மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. வழக்கம்போலவே கோலி மற்றும் டிவில்லியர்ஸையே சார்ந்திருக்கிறது. அவர்கள் இருவரும் சோபிக்காத பட்சத்தில் நிலைமை படுமோசமாகிவிடுகிறது.
undefined
குர்கீரத் சிங் மன் கடந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. அவருக்கு பெரிதாக இந்த சீசனில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த சிறிய வாய்ப்புகளிலும் பெரிதாக எதுவும் செய்யவில்லை. எனவே இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ஷிவம் துபே இறக்கப்படலாம். துபே பவுலிங் ஆப்சனாகவும் இருப்பார்.
undefined
அதேபோல மிடில் ஆர்டர் சிக்கலை சமாளிக்கும் விதமாக மொயின் அலி அணியில் சேர்க்கப்படலாம். எனவே இசுரு உடானா நீக்கப்படுவார்.
undefined
உத்தேச ஆர்சிபி அணி:தேவ்தத் படிக்கல், ஃபிலிப், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, மொயின் அலி, கிறிஸ் மோரிஸ், சிராஜ், சாஹல், நவ்தீப் சைனி.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியில் முதல் முறையாக கடந்த போட்டியில் ஆடிய பிரவீன் துபே பெரிதாக கவரவில்லை. எனவே அவர் நீக்கப்பட்டு மீண்டும் அக்ஸர் படேல் சேர்க்கப்படுவார்.
undefined
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா.
undefined
click me!